$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

தான்யா கவிதைகள்

துருப்பிடித்துக் கறுத்த

கடிகாரத்தின் செயற்பாட்டை விழுங்கி

எழுகிறது ஓர் பருவப் பெண்ணின் கிளர்ச்சிகள்

உயிர்ப்பைக் குரலிலும்

காதலை மார்பிலும்

பதுக்கிய

அவளது எதிர்பார்ப்பும் ஆசையும்

எந்த மனதையும் சென்றடையாது

மூடிக் கொள்கிறது.

நெருடல்களில் தனிமை புரியாது

விறைத்துக் கொள்கிறது குறி

என்னை,

என் உடலை,

நூறாயிரம் மலர் கொண்டு மூட

எத்தனிக்கிறது எனதிந்த ஆன்மா

எதிரில் மண்டியிட்டு அணைத்து

கசப்புகளை உள்வாங்கி

பாதங்களை வருடி

பெருவிரலின் வெடிப்புக்களையயல்லாம்

தன் வாய் கொண்டு மூடி

என்னை,

என் இளமையை

இன்பத்தை வேண்டி நிற்கும் உதடுகளை

கபளீகரம் செய்கிறது உனது உடல்

வழி அனுப்பி வைக்கும் தைரியமின்றி

காதலின் பெயரால் ஓர் ருத்ர தாண்டவம்

நடந்து முடிகிறது.

ஒக்டோபர் 2004

0

நீயில்லை

இரவின் அதிர்வுகளை மீறி

எழுகிறது சில ஒலிகள்

நீயற்ற வெளிகளை நிரப்புகின்றன

பிரிவின் பாடல்கள்

யாருடைய அந்தரங்கத்துள்ளும்

பேரிரைச்சலாய் நுழைந்து மீள்கிறது

காற்று

கடும் சூட்டு மணலில்

முள் முளைத்த காடுகளில்

நீ விட்டுப் போன நினைவுகள்

கைகளில் கால்களில் உடலில்

எதுவுமே இன்றி

நிர்வாணத்தின் அதிர்வுகளை

விழுங்கி,

ஆணின் பார்வை படாத

ஓர் அறையில்

நிம்மதியாய் உறங்கிப் போகிறேன்

தொலைந்துபோன ஒன்றைத் தேடி

என்னை என் இயல்பை

கொன்று கொண்டிருக்கிறது ஆன்மா

நீ ஆறுதல்கள் சொல்லுகிறாய்

வன்மமாய் வருகிறது

நீ தூங்கியிருக்கலாம்

நீ வேலையில் இருக்கலாம்

நீ படித்துக் கொண்டிருக்கலாம்

நீ புணர்ந்து, பிரத்தியேகமான

எனது இருக்கைகளை உடமைகளை

வெற்றிடமின்றி நிரப்பியிருக்கலாம்

ஓ நான் இன்னும் இங்கு தான் இருக்கிறேன்

காத்திருப்பின் நெடிய கதவுகளை

எட்டி உதைக்க வலுவற்று

நகர்ந்து கொண்டிருக்கிறது கடிகாரம்

ஓ நீ இன்னும் அங்கு தான் இருக்கிறாய்

டிசம்பர் 2004

தான்யா கவிதைகள் தான்யா கவிதைகள் Reviewed by மறுபாதி on 9:37 AM Rating: 5

No comments:

Powered by Blogger.