வரதர்
இருள்! இருள்! இருள்!
இரவிலே, நடு ஜாமத்திலே,
என் கால்கள் தொடும் பூமி தொடங்கி,
கண் பார்வைக்கெட்டாத மேகமண்டலம் வரை
இருள்! இருள்!
பார்த்தேன்.
பேச்சு மூச்சற்றுப்
பிணம் போல் கிடந்தது பூமி.
இது பூமி தானா?
மனித சந்தடியேயற்ற,
பயங்கரமான பேய்களின் புதிய உலகமோ?
ஒவ் ஒவ் என்றிரைவது
பேயா? காற்றா? பேய்க்காற்றா?
பேய்க்காற்று!
ஹா!
மனிதன் சக்தியற்றுக் கிடக்கும் இந்த வேளையிலே,
அவனுடைய சின்னமே அற்றுப் போகும்படி
பூமியை மஹதம்டு செய்யவோ வந்த இப்பேய்க்காற்று?
ஹா, ஹா, ஹா!
மபளிச்! பளிச்!டு
அதன் ஒளியிலே இன்பம் வளைவிலே இன்பம் .
ஓ!
ஒளியிலே பயங்கரம்! வளைவிலே பயங்கரம்!
மேகத்தின் கோபம்.
அவன் கண்கள்....... கண்கள் ஏது?
உடம்பிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் கோபாக்கினி!
விளக்கில் விழுகின்ற விட்டிலைப்போல, மின்னலின்
அழகிலே கண்
கெட்டுப் போகாதே!
பத்திரம்!
கண்ணை மூடிக்கொள்.
மபளிச்! பளிச்! பளிச்!“
மபட்,பட்... படாஹ்... ... .... பட், படப... ... ...
ஓ! ... ... ... ஹோ! ... ... ...“
முழக்கம்!
இடி!
பேய்க்காற்றின் ஹூங்காரத்தோடு, வேதாள முழக்கம்!
முழக்கம்!
காது வெடித்துவிடும்!
உன் ஹிருதயத் துடிப்பு நின்றுவிடும்!
காதைப்பொத்திக்கொள், வானம் வெடித்து விடுகிறது!
“டபார்!“
No comments: