$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

நானும் அவர்களும்

- யோகி

அவர்கள்

வெகுதூரம் சென்றுவிட்டார்கள்

தங்களை என்னிடமிருந்து

பறித்துச் செல்வதாக

நினைத்துக் கொண்டு

முன்னையதிலும் அவர்கள்

அவர்களைவிட

என்னிடமே அதிகமாயுள்ளார்கள்

என்னை மறுதலித்தாலும்

அதிகமான விருப்புடன்

அவர்களுடைய என்னை

ஏந்திச் செல்கிறார்கள்

அவர்களையும் என்னையும்விட

அவர்களுடைய நானும்

என்னுடைய அவர்களும்

விரோதங்கொண்ட பொழுதுகளில்

என்னுடைய நானைக் கண்டேன்

அவர்களும் நானும் உள்ளவரை

அவர்களுடைய நானும்

என்னுடைய அவர்களும்

இருப்பார்கள் காயங்களோடு

நானும் அவர்களும் நானும் அவர்களும் Reviewed by மறுபாதி on 9:08 AM Rating: 5

No comments:

Powered by Blogger.