$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

பொறுப்பில்லாததால் வந்த சாவு

ஆங்கில மூலம் - நியூப்பர் ஜெயின்

தமிழில் - கஞ்சாக் கறுப்புக் கள்ளன்

எனது எழுத்தாக்கங்களை

ஒரு பிறவுண் பையில் வைத்திருந்தேன்

வேலைக்குப் போகும் போது

ரிக்ஷாவில் அவற்றைவிட்டு விட்டேன்

எனது பாடல்கள்

மரத்தாலான மேல்மாடிப் படிக்கட்டுகளில்

பொக்கற்றிலிருந்து நழுவிவிட்டன

யாராவது ஒருவர் அதனை பொறுக்கியிருக்கலாம்

நீ இரண்டு மாதங்களின்முன்

பிரிந்து சென்றபோது

எனது இதயம் உன்னிடம் நழுவியது

நீ இப்போது

கட்டாயமாக அதைத் தொலைத்திருப்பாய்

பொறுப்பில்லாததால் வந்த சாவு பொறுப்பில்லாததால்  வந்த சாவு Reviewed by மறுபாதி on 9:28 AM Rating: 5

No comments:

Powered by Blogger.