$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

தலையங்கம்

வணக்கம்,

பெரும் அவலம் ஒன்றைத் தமிழ் மக் கள் சந்தித்து ஓராண்டு கடந்துவிட்டது.

மிகக் கொடிய அவலங்களையும் சாவுகளையும் சந்தித்திருக்கின்ற மக்கள், எல்லாவற்றிலும் இருந்தும் மீள வேண் டிய தேவை இருக்கின்றது. மக்களும் அதனையே விரும்புகின்றனர். ஆயினும் யுத்தத்தின் கொடூரம் ஒன்றும் மறக்கக் கூடி யனவல்ல.

இடம்பெயர்ந்த மக்களில் பெரும் பகுதியினரும் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். எனினும் பெரும்பான் மையான மக்களும் தமக்குரியதான வசதிகள் சரியான முறையில் செய்துதரப்படவில்லை எனக் குறைபடுகின்றனர்.

மீள்குடியேற்றம் என்பது வெறுமனே சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவதல்ல. அந்த மக்கள் மீளவும் தங்கள் வாழ்வைக் கட்டியயழுப்புவதற்கான வழிகளையும் ஏற்படுத்துவதாகும்.

இதனைப் புரிந்துகொண்டு இதனோடு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் செயற்பட வேண்டும். எந்த முடிவையும் தராது முடிந்து போயுள்ள இந்த யுத்தம் தந்தது இழப்புக்களைத்தான்.

இந்த அழிவு யுத்தத்தில் இறந்துபோன அனைவரையும் நாம் நினைவிற் கொள்வதோடு, நீதியான சமாதானம் ஒன்றுக்காகவும் காத்திருக்கின்றோம்.

ஆசிரியர்
தலையங்கம் தலையங்கம் Reviewed by மறுபாதி on 9:25 AM Rating: 5

No comments:

Powered by Blogger.