$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

கடிதங்கள்

மறுபாதி - 3 வாசிக்கக் கிடைத்ததும் மிக மகிழ்ச்சி அடைந்தேன். மேலும் பாதியே உன்னில் தவின்ற சகோதர மொழிக் கவிதையின் மொழிபெயர்ப்பை வாசித்தேன். உளம்நெகிழ்ந்தேன்.
எம்மினம் படும்பாட்டை சகோதர இனத்தவர்களும் புரிந்து கொண்டமை மன ஆறுதலைத் தருகிறது. அதனை மொழிபெயர்த்த ‘ஃபஹிமா ஜஹான்’ அவர்களுக்கு நன்றி கள். திவ்வியாவின் பக்கங்கள் அழகாக நீண்டு செல்வதும் மறுபாதிக்கு மெருகூட்டுகிறது. தா.இராமலிங்கம் பற்றிய திவ்வியாவின் பார்வை மிக வித்தியாசமாக உள்ளது.
சில கவிதைகள் வாசகனுக்குப் புரிதலில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மறுபாதியின் அட்டைப் படங்கள் உளத் தாக்கத்தை உண்டு பண்ணாத படங்களாக வந்தால் சிறப்பாக இருக்கும். கருணாகரனின் கவிதை பற்றிய கட்டுரை மிக முக்கியமான பார்வையைக் கொண்டிருக்கிறது.
தமிழ்க் கவிதையின் ஐம்பதாண்டு கால வளர்ச்சியினை நினைவுறுத்துவதற்காகப் பிரசு ரிக்கப்பட்ட ரமே´ன் கட்டுரை அருமையாக உள்ளது. பிச்சமூர்த்தி, வரதர் போன்றோரின் கவிதைகளும் புதுக்கவிதையின் பரிமாணத்தைப் புரிய வைத்தன. மேலைநாட்டுக் கவிஞரின் படைப்புக்கள், அறிமுகங்களையும் பிரசுரித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என நினைக்கி றேன்.

வரணியூர் ஜகன்

தங்கள் மறுபாதி சஞ்சிகையின் 2 பிரதிகளை அண்மையிலே வாசித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஆரோக்கியமாகக் கவிதைக்கென ஒரு சிறுசஞ்சிகை வெளிவருவது குறித்த வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும் உற்கள் வெளியீடுகளைத் தொடர்ந்தும் பெற ஏதா வது வெளிநாட்டுச் சந்தா முறை உள்ளதா? இங்கே சில பேர் விநியோகிக்கிறார் கள் என்று நினைக்கிறேன்.
அவர்கள் என்னிடத்திலிருந்து மிகவும் தொலைவில் இருக்கிறார்கள். நேரடி யாக உங்களிடமிருந்து அஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளவும் வழிகளை அறிய விரும்புகிறேன்.

தீபன் – கனடா
கடிதங்கள் கடிதங்கள் Reviewed by மறுபாதி on 8:56 AM Rating: 5

No comments:

Powered by Blogger.