$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

காதல் பூங்கா

ஆங்கில மூலம் - வில்லியம் பிளேக்

தமிழில் - சத்தியதாசன்

சென்றிருந்தேன் நான் காதலின் பூங்காவுக்கு

முன்பொருபோதும் கண்டிராதவற்றைக் கண்டேன்

நான் வழமையாக விளையாடும் பசுந்தரை நடுவே

முளைத்திருந்தது ஒரு தேவாலயம்.

தேவாலயத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன

மனிதன் விலக்க வேண்டியவை குறித்து எழுதப்பட்டிருந்தது அக்கதவுகளில்

ஆகவே நான் மீண்டும் காதலின் பூங்கா நோக்கிப்பார்வையைத் திருப்பினேன்

இனிய மென்மலர்கள் ஆயிரமாய்ப் பூத்திருந்தன அங்கே.

இப்போதோ அப்பூங்காவில் பெரும் எண்ணிக்கையில் புதைகுழிகள்

பூக்கள் நிறைந்திருக்க வேண்டிய இடத்தில் கல்லறைகள்

கறுப்பு உடை மதகுருக்கள் தம் நாளாந்தப் பிரார்த்தனை முடித்துவிட்டு

அங்கிருந்த காட்டு ரோஜாக்களுடனேயே கனவுகளையும் எனது மகிழ்ச்சிகளையும்

சேர்த்துக் கட்டியபடி போய்க் கொண்டிருக்கிறார்கள்.


காதல் பூங்கா காதல் பூங்கா Reviewed by மறுபாதி on 9:23 AM Rating: 5

No comments:

Powered by Blogger.