$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

“மறுபாதி” இதழ் மூன்றின் கவிதைகள் சில குறிப்புகள்

- ந.சத்தியபாலன்

மறுபாதிகவிதைக்கான காலாண்டிதழ் நவீனத் தமிழ்க் கவிதைக்குத் தன்னாலான பணியினை மெய்யான சிரத்தையோடும் ஈடுபாட்டோடும் ஆற்றி வருகிறது. கவிதைஎன்னும் மொழிசார் கலையின் ஆழ அகலங்கள் பற்றிய கூர்ந்த பிரக்ஞையோடு அதை ஒரு ஆரோக்கி யமான தடத்தில் முன்னெடுத்து வருவது பாராட்டி வரவேற்கவேண்டிய விடயம்.

மூன்றாவது மறுபாதியில் வெளிவந்துள்ள கவிதைகள் பற்றிய ஒரு மீள் பார்வையினை முன்வைப்பதே இக்குறிப்புகளின் நோக்கம்.

ந. பிச்சமூர்த்தி, வரதர், தான்யா, பா. அகிலன், தபின், ந. சத்தியபாலன், தீபச்செல்வன், மருதம் கேதீஸ், எஸ்.பாயிஸா அலி, சண்முகம் சிவகுமார் ஆகியோரின் கவிதைகள் இவ்வித ழில் வெளியாகியுள்ளன.

இதழை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் முன்னைய இரண்டு இதழ்களைக் காட்டிலும் இவ்விதழ் சிறப்பாய் அமைந்துள்ளதெனவே சொல்லத் தோன்றுகிறது. எனவே இத்தகைய கனதி தொடர்ந்தும் பேணப்படுதலின் அவசியத்தை அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது.

ந. பிச்சமூர்த்தி 1934ல் எழுதிய காதல்”, வரதர் 1943ல் எழுதிய ஓர் இரவிலேஆகிய கவிதைகள் நவீன கவிதையின் ஐம்பதாண்டு கால நிறைவின் நினைவையயாட்டியும் இந்தியா ஈழம் ஆகியவற்றில் முதன் முதலாக எழுதப்பட்ட நவீன கவிதைகள் என்ற காரணத்திற்காக வும் பிரசுரிக்கப்பட்டுள்ள இக்கவிதைகள் தம்பாற் கொண்டுள்ள சில தனித்துவப் பண்புகள் கருதி கவனிப்பைப் பெற்றுமுள்ளன.

ந. பிச்சமூர்த்தியின் காதல்குயில்களின் குரல்வழி இயைகிற மெல்லுணர்வின் தழல் குழைத்துத் தேனாக்கியஇனிமையை அந்த அனுபவத்தின் துயர்ச் சுகத்தை மொழிவழி கொண்டு வந்திருக்கிற ஒரு படைப்பு. 1934ல் கவிதை மொழியின் கட்டமைப்பு இறுக்கமாகப் பேணப்பட்ட ஒரு சூழலில் கட்டவிழ்ந்த நவீன கவிதை நடை எங்ஙனம் படைப்பாளியின் வெளிப் பாட்டு முனைப்புக்கு உரியதோர் களமாய் விளங்கியது என்பதற்கு இக்கவிதை ஒரு சரியான உதாரணம். வரதரின் ஓர் இரவிலேமனித வரையறைகள், மதிப்பீடுகள், கண்டுபிடிப்புகள் யாவற்றையும் தாண்டி நின்று தாண்டவமாடும் இயற்கையின் சீற்றத்தை, வேகத்தை, கட்டு டைப்பை மொழிக்குள் கொண்டு வருகின்ற ஒரு முயற்சி. வார்த்தைக்குள் அகப்படாத ஒரு அனுபவத்தை வார்த்தையிற் சிறைப்பிடிக்கும் ஒரு எத்தனம்.

இதைப் படிக்கையில் பாரதியின் சட்டச்சட சட்டச்சட சட்டச்சட சட்டா...கொட்டியிடிக்குது மேகம்... நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

மனு­ துயரங்களில் உச்சமான ஒன்று, கண்டுகொள்ளப்படாமை அல்லது புரிந்து கொள் ளப்படாமையாகும். அதிலும் ஆழமானது பொருத்தமற்ற அல்லது எதிர்மறையான கணிப் போடு கையாளப்படுதல். தான்யாவின் முதற் கவிதை இவ்வுணர்வினையே எம்முடன் பகிர்ந்து கொள்ள முனைவதாகப்படுகிறது.

இணைந்திருந்த ஒரு பிரியத்துக்குரிய ஜீவன் பிரிந்து போன பிறகு ஒரு பெண்ணின் மனத் தவிப்பும் துயரும் இரண்டாவது கவிதையில் சித்திரிக்கப்படுகிறது.

இந்த இரண்டு கவிதைகளும் வாசகரிடத்தில் தொற்ற வைக்க முனையும் அனுபவம் இன் னும் கொஞ்சம் இறுக்கமான சொல் முறையை, இன்னும் மெளனத்தைக் கொண்டிருப்பின் தனது தரத்தில் இன்னும் உயர்ந்திருக்கலாம் எனப்படுகிறது. திறந்த ஒரு வெளிப்பாட்டைக் காட்டிலும் சுரீரென விழும் ஒரு கண நேரப்பார்வை காவிப் போகுமே அர்த்தங்கள் அதுபோல, ஆயிரம் வார்த்தைகளைக் காட்டிலும் அழுத்தமான ஒரு நீடித்த தீண்டல் பேசிப்போகுமே செய்தி கள் அதுபோல.

கவிதையில் தனக்கேயான ஒரு இயங்கு தளத்தை வரித்துள்ள பா.அகிலனின் பேராடைபெருநிலம்: மண்ணடுக்குகள் பற்றிய அறிமுகம், ஆகிய கவிதைகள் பரந்துபட்டதும் ஆழ்ந்தது மான ஒரு கவனிப்பை, ஒரு கூர்ந்த பார்வையைக் கோரி நிற்பன. வார்த்தைகளை அவற்றின் நிர்ணயகரமான அர்த்தங்களை இடைவிடாது உடைத்துத் திறந்து முடிவில்லாது செல்லும் ஒரு மனமூட்டத்தின் பயணப் பாதையில்த்தான் இலக்கியங்கள் சித்திக்கின்றனஎன அவரே ஒரு பின்னுரையில் குறிப்பிடுவது போலத் தனது கவிதை மொழியூடாக அவர் விரிக்கும் அனுபவ உலகம் பரந்த தாய் தொலைவு அறியாததாய் அமைகிறது. வாழ்வு பற்றிய, உலகு பற்றிய, இருப்பு பற்றிய விசாரங்களை விசாரிப்புக்களை எம்முள் விதைக்கிறது. தேடுபவர்கள் கண்டடைவார்கள்

வாழ்வில் நேரிடும் அபூர்வத் தருணங்கள் பற்றிய ஒரு கவனிப்புக்கு எம்மை அழைத்துச் செல்வதாய் அமைகிறது தபினின் தேம்பியழும் முத்தமொன்று இக்கவிதை தன் நேர்ப் பொருளில் விரிக்கின்ற காட்சி இயல்பான தொன்றாகத் தன்னை அடையாளம் காட்டும்போதும் அது கொள்ளும் படிம அர்த்தத்தில் மனித வாழ்வின் அறியப்படாத மூலைகளில் நேரிடும் அரிதான கணங்களின் சாசுவதத் தன்மையை எடுத்துரைப்பதாகக் கொள்ளலாம். தத்தம் திசைவழி தொடர்வோரின் பயணங்களில் தபின் சொல்லும் முத்தத்தின் தேம்பல் ஒலி கேட்ட படியே இருக்கிறது.

இவ்விதழின் அடுத்த இரு கவிதைகளும் என்னுடையவை எனவே அந்தக் கவிதைகள் என்னுள் சம்பவித்த வகையினையும் அவற்றினூடான எனது பரிமாறல்களையும் இங்கு முன் வைப்பதே பொருத்தமாகும் என நினைக்கிறேன். ஒரு கவிதைக்கான பொறி எந்தத் திசையி லிருந்தும் எந்தக் கணத்திலிருந்தும் நினைவின் எந்த மூலையிலிருந்தும் கிளம்ப முடியும்.

எழுதாத மடலொன்றின் கதைக்கான முதல்வரி ஏதோ ஒரு நினையாத கணத்தில் என் னுள் தோன்றியது. அவ்வரி தன்னுள் விரித்த பொருளின் அடியயாற்றுகையில் அன்றாட வாழ் வின் அனுபவம் பற்றிய ஒரு பதிவாக அது என்னுள் வளர்ந்தது. சுடர் உயிராகவும் அதன் துடிப்பு வாழ்வு குறித்த தவிப்பாகவும் எது பற்றியும் அக்கறையின்றி வீசியபடியிருக்கிற காற்று காலமாகவும் உருவகமாகி அக்கவிதை வளர்ந்தது.

காற்றின் செயல் தன்னிச்சையானது. நெய்யு றிஞ்சும் திரியில் தரித்து நிற்கிற சுடரின் பலமோ தன் வசமற்றது. ஆனாலும் வேண்டுதல்கள்... தரித்து நிற் பதற்கான கோரிக்கைகள்... எல்லாம் தத்தம் வரை யான பலத்தோடு... கணங்களோ முடிவற்று உருண் டபடி.

இரும்பு அரண்களுள் தம்மை அடைத்துக் கொண்டு பகல்களைக் கறுப்பாக்கும் மனிதர்கள் நிரம்பிய இந்தப் பூமியில் கேட்பவர்கள் அற்றுப் போய்க் கொண்டிருக்கையில் பல காலைகள் இருட் டில் தலைகுப்புற விழும் நிலை தான் தொடந்தபடியிருக்கிறது என்பது பற்றிய எனது ஆதங்கமே. ஒருகறுப்பு நாளின் ஜனனம்தீபச்செல்வனின் எல்லாக் கண்களையும் இழந்த சகோதரி யின் கனவுயதார்த்தத்தின் நிழற்படமான இக்கவிதையைப் படிக்கையில் மனத்திரையில் விரியும் துயரக் காட்சிகளையும் குருதியின் வாடையையும் தவிர்க்க இயலாது.

எனினும் தீபச்செல்வன் இக்கவிதையை இன்னமும் நேர்த்தியாகச் செதுக்கியிருக்கலாம் என்றே சொல்லத் தோன்றுகிறது. சொற் களைக் குறைத்து ஒரு இறுக்கமான அமைப் பைத் தந்திருக்க முடியும். தோன்றுகிற எல்லா வற்றையும் சொல்லிவிட வேண்டும் என்கிற வேகத்தைக் கட்டுப்படுத்தி சொல்லிடை வெளிகளூடாகவும் மெளனத்தினூடாகவும் ஒரு கனதியைத் தோற்றுவித்திருப்பின் அவ ரது கவிதை மேலும் மெருகுபெற்று ஆழ மான ஒரு படைப்பாகியிருக்க முடியும்.

அதிகமும் பூடகத்தன்மையைத் தனது கவிதைகளின் இயல்பாய்க் கொள்ள முனை கிறாரோ என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கும் விதத்தில் அமைந்தது மருதம் கேதீஸின் தமயந்தி வடிவிலான கண்ணாடிக் குவளை யில் எனது உலகை ஒரு புள்ளியாகக் காண் கிறேன்என்னும் கவிதை, படித்த பலரையும் திகைப்புக்குள்ளாக்கிய, குழப்பத்துடனான கேள்விகளைத் தந்த கவிதையாக உள்ளது.

ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு புதிர் போலாக்கி வாசகர்களைச் சோதிக்கிறாரோ? என ஐயம் எழுகிறது.

ஒரு கவிஞன் தான் காணும் ஒவ்வொன் றையும் தனது சுயமான புரிதலோடு அர்த்தப் படுத்தும் உரிமை உடையவன்தான் எனி னும் கவிதைக்குள் வாசகன் நுழைவதற்கு ஒரு சிறு வழியையாவது வைத்திருக்கக் கூடாதோ...? படிமமும் குறியீடும் வாசக னைப் பயமுறுத்தும் கருவிகளாகி விடாமல் அவர் பார்த்துக் கொள்ள வேண்டும்-அல் லது அமரர் லா.ச.ராமாமிர்தம் சொல்வது போல புரிதல் என்பது அவரவர் நெஞ்சின் மீட்டலுக்கு ஏற்பஎன்று சொல்லிவிடு வாரோ?

எஸ்.பாயிஸா அலியின் மஅரூபமான வன்டு இரக்கமில்லாத தன்னுட் சுருக்கிப் போகும் சுயநல உலகம் பற்றிய ஒரு பதிவு என்றைக்கும் போலவே தொழுகைப் பாயால் அளவீடு செய்யப்படும் கண்ணீரின் உப்புச் செறிவு என்னும் தொடர் மனசைத் தொடுகிறது. எனினும் அதிகமாய்ச் சொற்க ளைக் கொட்டியுள்ளாரோ? என்ற ஐயத்தை இக்கவிதை தோற்றுவிக்கிறது.மகட்டிறுக்கம்டு ஒரு நல்ல கவிதைக்குத் தேவையான பண்பு என்பதை சுந்தரராமசாமி போன்றோர் வலி யுறுத்துவதைக் கவனிக்கவேண்டும்.

சண்முகம் சிவகுமாரின் நான் முதிரும் ரோஜாப் புதர்மறுபரிசீலனைக்குப் பிறகு பிர சுரிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு கவிதை. பூடகத் தன்மையுடன் கூறுதல் ஒரு கவிதைப் பண்பு தான் எனினும் கவிதையின் நகர்வு படைப்பாளியின் நோக்கத் தெளிவை வெளிப்படுத்த வேண்டும். இந்தக் கவிதையி லும் சொற்தேர்வு-தெளிவு இவை குறித்த மிகையான உள்ளுணர்வோடு படைப்பாளி தொழிற்படுதல் அவசியமெனத் சொல்லத் தோன்றுகிறது.

நவீன கவிதைக்கான சீரிய பணியை மேற்கொள்ளும் மறுபாதி, தான் தேர்வு செய் யும் படைப்புகள் குறித்து இன்னமும் விழிப்பு டனும் தெளிவுடனும் இருந்தால் நன்றாயிருக் குமே என்று தோன்றியமையே இக்கட்டுரை எழுதப்படக் காரணமாகிறது.

“மறுபாதி” இதழ் மூன்றின் கவிதைகள் சில குறிப்புகள் “மறுபாதி” இதழ் மூன்றின் கவிதைகள்  சில குறிப்புகள் Reviewed by மறுபாதி on 9:05 AM Rating: 5

No comments:

Powered by Blogger.