
01
அதிகாலை
வானம் இருண்டிருந்தது
சூரியனைக் காணவில்லை
காற்று வீசத் தயங்கியது
வீதியயங்கும்
ஆழ்ந்த அமைதி
எல்லாமும்
எல்லாமுமாய் இருந்த
எங்கள் இறுதிப் பயணம்
விடையளிக்கமுடியா
விழிகளுடன் நான்
விருப்பமின்றி நீ
போக மறுத்த இதயம்
வெடித்துச் சிதறியது.
02
ஒருவித ஒலியுடன்
அங்குமிங்கும்
ஓடிக்கொண்டிருக்கிறது
பிரியத்துக்குரிய உன் நாய்
நேற்று மாலை
களற்றிப் போட்ட உடுப்புக்களில்
மணக்கிறது உன் வாசம்
சீர் செய்யப்படாத படுக்கை
துவாயில் இன்னும் வியர்வை ஈரம்
இறுதிக் கிரியைக்காக
அஸ்தி
வீட்டின் மூலையில்
புதைக்கபட்டுவிட்டது.
விமலாதாஸ் கவிதைகள்
Reviewed by மறுபாதி
on
8:58 AM
Rating:

No comments: