$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

ஆகவே என்னை நீங்கள் கொலை செய்யலாம்

- பெரிய ஐங்கரன்

நீதிகேட்டு வழக்காடி

நாட்டை எரிக்கும் வல்லமை இல்லை

உங்களது கழுகுப் பார்வையைக் களைந்து எறியவோ

குறியை வெட்டி எறியவோ

எனக்கான ஒன்றும் இல்லை

செத்துப்போன இந்தப் புல்லும் கல்லும்

சாட்சி சொல்ல வரப்போவதுமில்லை

என்ன செய்தாலும்

உங்களை யாரும் தட்டிக் கேட்கப் போவதுமில்லை

மேலும்

உங்களுக்கு நான்

தாயும் இல்லை சகோதரியும் இல்லை

ஆகவே

என்னை நீங்கள் கொலை செய்ய

நிறையவே காரணங்கள் உள்ளன.


ஆகவே என்னை நீங்கள் கொலை செய்யலாம் ஆகவே என்னை நீங்கள்  கொலை செய்யலாம் Reviewed by மறுபாதி on 9:21 AM Rating: 5

No comments:

Powered by Blogger.