$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

கவிதை

மற்றொரு பரிமாணத்தை நோக்கி
கருணாகரன்

01
''கட்டவிழ்ந்து கட்டவிழ்ந்து செல்லும் இந்த உலகம் முடிவற்ற புதிர்களையும் எண்ணற்ற நிறங்களையும்/ வண்ணங்களையும் எல்லையில்லாத விநோதங்களையும் உற்பத்தி செய்த படியே இருக்கின்றது. மனதின், எண்ணங்களின், சிந்தனையின் விநோதங்களும் எல்லை யின்மையும் புதிர்மையும் எப்போதும் எல்லாவற்றிலும் ஏராளம் ஏராளம் கட்டவிழ்ப்புகளையும் புதிதாக்கங்களையும் நிராகரிப்புக்களையும் ஏற்புகளையும் அனுசரிப்புக்களையும் உண்டு பண்ணிக்கொண்டேயிருக்கின்றன. எது சரி, எது பிழை என்றறியாச் சூழல்; நிலைமை எல்லாத் தலைகளுக்குள்ளும் புரக்கேறிக் கொண்டிருக்கிறது. சரியாக எத்தனை இருக்கிறதோ அத் தனை தவறாகவும் அல்லது பிழையாகவும் இருக்கிறது இந்த உலகம். மறதியும் நினைவும் அன்பும் குரோதமும் விருப்பமும் வெறுப்பும் இருளும் ஒளியும் மாயையும் தெளிவும் என்று ஒரு விநோதக் கலவையாக அது தன்னை நிலைநிறுத்திக் கொண்டும் நிலை மாற்றிக் கொண்டுமுள்ளது. புதிதாக்கங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது எனில் பழமையும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. மனிதனுக்குப் புதுமையில் இருக்கின்ற அத்தனை நாட்டங்களும் பழையதிலும் புராதனத்திலும் உண்டு. இது புதுமை நாட்டமா? புராதனத்தின் ஈடுபாடா? என்ன புதிர் இது? என்ன விநோதம் இது? இதை யதார்த்தம் என்பதா? இதுதான் உண்மை என்பதா? இதுவே மாயம் என்பதா?''

நேற்றிரவு எதிர்பாராத விதமாக இந்தக் குறிப்பை ஒரு பழைய காகிதத்தில் படித்தேன். இவ்வாறு நீண்டு செல்லும் இந்தக் குறிப்பு எங்கேயோ படித்தவை போல ஒரு நினைவு. எங்கே, எங்கே? யுத்தத்தின் பேரொலியும் அவலக் காட்சிகளும் அதன் குரூரமும் நிரம்பியிருக்கும் மூளைக்குள்ளிருந்து சட்டென எந்த நினைவுகளையும் மீட்டுக்கொண்டு வர முடியவில்லை. நண்பர்களிடம் இது பற்றிக் கேட்கலாம். ஏனெனில், இதைப் படிக்கும் போது எப்படியோ ரமேஸின், சித்தாந்தனின் நினைவுகள் வருகின்றன. கூடவே கலாவண்ணன் தயாளனின் நினைவுகளும்; அப்போதுதான் - இந்த நண்பர்களுடன் இருந்த போதுதான் - நான் ''கந்தன் டேவிற்கலாவை'' சந்தித்திருந்தேன். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் என்று நினைவு. இந்தக் காலக் கணிப்புச் சற்றுக் கூடலாம் அல்லது குறையலாம். அப்போது இலங்கையில் அமைதிக்கான பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் இந்தப் பேச்சுகள் நடந்து கொண்டிருந்த காலத்தை யுத்த தயாரிப்புக் காலம் என்றார் கந்தன் டேவிற்கலா. எதற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்கள் உண்டென்பதால் நான் அதிகம் அது குறித்து வாதிடவில்லை. க.டே.கலா சொன்னதைப் போலவே பின்னர் யுத்தகாலம் வந்தது. ஊழிக் கூத்தும் நடந்தது. இப்போதுமமயுத்தமற்ற காலம்?'' என ஒன்று வந்திருக்கிறது. இந்தக் காலம் பற்றிய கந்தன் டேவிற் கலாவின் மதிப்பீடும் அனுமானிப்பும் என்னவோ தெரியவில்லை. யுத்த நாட்கள் எல்லாவற்றையும் சிதைத்து விட்டதைப் போல கந்தன் டேவிற் கலாவையும் சிதைத்திருக்கக் கூடுமோ ! அல்லது எல்லாவற் றையும் யுத்தம் செதுக்குவதைப் போல கலாவையும் அது மேலும் செதுக்கியிருக்குமோ! எல் லாச் சிதைவுகளுக்குப் பின்னும் இனிச் சிதையமுடியாத துகள் என்ற அளவில், நுண்ணள வில் க.டே.கலாவை என்றேனும் சந்திக்கக்கூடும். அப்போது உரையாடல்கள் எப்படியிருக் குமோ! அதை நினைக்கவே நெஞ்சு பதறுகிறது. எனினும் கந்தன் டேவிற் கலாவுடன் நான் முன்னர் நடத்திய உரையாடல்கள் இப்போது நினைவில் எழுந்து வருகின்றன. அதுவும் நமது கவிதைகள் பற்றி, வாழ்வு குறித்து குறிப்பாக மநிகழ்கவிதைடு பற்றி கந்தன் டேவிற் கலா கொண் டிருந்த சிந்தனைகள் முக்கியமானவை. மக்களை சமூக மயப்படுத்துவதற்கும் அரசியல் மயப் படுத்துவதற்கும் வாழ்வை, அதன் எண்ணற்ற சாத்தியங்களாக விரிந்துசெல்லும் பல் பரி மாண நிலைகளில் உணர்ந்து கொள்வதற்கும் அரசியலின் வன்முறையிலிருந்து மீள்வதற் கும் கவிதை நிகழ் கவிதையாக வேண்டிய அவசியம் குறித்து க.டே.கலா கதைத்ததெல்லாம் எத்தனை ஆச்சரியமானவை. இப்போது மமறுபாதிடுஎன்ற கவிதைக்கான இதழில் சி.ஜெயசங் கர் மநிகழ் கவிதைடு குறித்து எழுதியிருப்பதைப் பார்க்கும்போது கலாவின் கூற்றுக்களே ஞாப கத்தில் வருகின்றன.அன்றைய அமைதிக் காலத்தில் அல்லது கலா சொன்னதைப் போல கொந்தளிப்புக்கான கருக்கொண்ட காலத்தில் நிகழ்கவிதை இயக்கம் குறித்த கலாவின் சிந்த னைகளும் விருப்பங்களும் முக்கியமானவையாக இருந்தன. சூழல் மற்றும் காலப் பிரக்ஞை யுடைய நிகழ்கவிதை இயக்கத்தின் செயல்விரிவும் பண்பு நிலையும் உச்சமடையும்போது அது பெரும் விழிப்பை நமது சமூகத்தில் உருவாக்கும் என்று கலா நம்பினார்.

1980களில் சேரன், ஜெயபாலன், நுஃமான், அ.யேசுராசா போன்றோர் முன்னெ டுத்த கவிதா நிகழ்வின் விருத்தியும் பரிமாணமும் தொடரப்பட வேண்டும் என்று கலா விரும்பி னார்; அதை அவர் வலியுறுத் தினார். நிகழ்கவிதைக்குரிய அடையாளங்களும் அம்சங்களும் நமது நவீனகவிதைகளில் - குறிப்பாக ஈழக் கவிதைகளில் நிறையவுண்டு என்பது கலாவின் கணிப்பும் நம்பிக்கையும். ஜெயபாலன், சு.வி., முருகையன், மஹாகவி, நீலாவணன், புதுவை இரத்தினதுரை, நுஃமான் போன்ற பலரின் கவிதைகள் நிகழ்கவிதைக்குரிய அம்சங்களைத் துலக்கமாகக் கொண்டவை என்று கலா கூறியது ஞாபகம். இளைய கவிகளில் நாக.சிவசிதம் பரம் , த.ஜெயசீலன் இன்னும் சிலரையும் அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார். கூடவே நிலாந்த னின் மமண்பட்டினங்கள், யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமேடு, அஸ்வகோஸின் கவிதை கள் , மு.பொ.வின் பல கவிதைகள் என நிகழ்கவிதை அமைப்புக்கேற்ற கவியாக்கங்கள் நிறையவுண்டு என்றார் கலா. குறிப்பாக ஈழக் கவிதைகளில் பெரும் பாலானவையும் நிகழ் கவிதைக்குரிய அடிப் படையைக் கொண் டவை. பொதுவாக இவற் றின் மொழிதல் முறை யும் விவரிப்பும் உணர்ச் சியையும்நிகழ்கவிதைப் பண்புக்கு ஒடுக்கமான இந்தக் கவிதைகளை நிகழ்கவிதையாக சமூ கத்தளத்தில் பரிமாற் றம் செய்யும்போது பெற் றுக்கொள்ளும் அனுபவங்களும் சந்திக்கும் சவால் களும் இந்தக் கவிதைகளின் இயல்பிலும் குணத்திலும் மேலும் விருத்திகளை உண்டாக்கும் என்றார். என்றபோதும் நிகழ்கவிதை குறித் துச் சரியான விளக்கம் அப்போது நமக்குச் சரியாகப் புலப்படவில்லை. அதற்கான சவால்க ளும் நிறையவிருந்தன. எனவே இதுகுறித்த விவாதங்கள் அப்போது கடுமையாக நிகழ்ந்தன. வினாக்களும் ஏராளம். அந்த விவாதத்தின் சில பகுதிகள் இங்கே சுருக்கித் தரப்படுகின்றன.

02

நிகழ்கவிதை என்றவுடன் முதல் நிலை விளக்கமாக கவிதைகள் அது சமூகச் செயற்பாட் டுக்கான ஒரு வகையான உத்தி, உபாயம், முயல்கை, செயற்பாடு என்றே கொள்ளப்படும். இப்படிப் பார்க்கும்போது உடனடியாக நம் அனுபவப் பிராந்தியத்தின் விழிப்புக் காட்டும் காட்சி அல்லது காணும் காட்சி இது கவிதையை தட்டையாகவும் பரப்புரைச் சாதனமாகவும் ஆக்கி விடும் என்பதே. ஆனால், இந்த அச்சத்துக்கு அப்பால் கவிதை அதன் கலைச்செறி வுடன் நிகழ்கவிதை ஆகமுடியும்; ஆகவேண்டும். இதற்கு நாம் தனியே கவிதையை காகிதத்தில் மட்டும் எழுதி எடுத்துக்கொண்டோ மனதில் பாடம் பண்ணிக் கொண்டோ போகமுடியாது. அது நிகழ்கவிதை பற்றிய அறிமுகத்திற்கு எதிர்நிலை அம்சங்களையே அதிகமாகவும் உற் பத்தி செய்யும். நாம் கவிதையைத் தனித்த ஒரு விடயமாக, ஒரு பொருளாக குறிப்பாக கலை என்ற மேல் நிலைத் தகுதியை வைத்துக்கொண்டு அதைப் புனிதப்பொருளாகப் பார்க்கமுடி யாது. கவிதை நமது வாழ்வின் எல்லா நிலைச் சாத்தியங்களிலும் இணைந்த ஒன்று. எந்தப் பொருளும் மறுவடிவம், புதுவடிவம் பெறுவதைப் போல அதுவும் தன்னிலை மாற்றங்களுக் குட்படுவது. நாட்டுப்புறப் பாடல்களும் கூத்துப் பாட்டுக்களும் எப்படி புதுமைப் பாட்டுடன் மாற்று வடிவம் கொண்டு, புதுக் கூறுகளுடன் இன்று மெல்லிசையாகவும் நாட்டுப்புறப் பாடல்கள் கானா மற்றும் சினிமா இசைப் பாடல்கள் என்றெல்லாம் விரித்தியடைந்துள்ளனவோ அவ் வாறே நமது கவிதையும் துணைக்கூறுகள், துணை அம்சங்களுடன் இணைந்தும் கலந்தும் அளிக்கை நிலைக்கு - நிகழ்நிலைக்கு மாற்றம் பெற வேண்டும். இசை, அளிக்கை முறை, ஊடகம்+சாதனம் என்பன போன்றவற்றில் இந்த நிகழ்நிலை கலந்து உருவாக வேண்டும்.

தனி உலோகம் உபயோகப் பொருளாகுதல் ஆகுவதற்கு தயாராகினாலே அல்லது அதை அவ்வாறு நாம் மாற்றும் போது தான் உலோகத்தின் பயன்பாடு உச்ச நிலை எய்தும். அது தன் வரையறைகளை நெகிழ்த்திக் கொள்கிறது. எல்லாச் சாத்தியங்களுக்கும் இடமளிக்கிறது அது. இங்கே உலோகம் உலோக மாகவும் அது உலோகமற்றதாகவும் இருக்கிறதல்லவா! அவ்வாறே கவிதையும் மொழியின் அதிக சாத்தியங்களை / அதிகூடிய சாத்தியங்களைக் கொண்டியங்கும் கவிதை, அதனின்றும் இன்னும் தன்னை நெகிழ்த்தி, இசையுடனும் அல்லது இன்னும் பல இணை பொருட்களுடனும் கூறுகளுடனும் நிகழ்கலையாக, ஆற்றுகைக் கலையாக மாறலாம். ஒன்றுடன் ஒன்று இணைந்ததாக அல்லது பலவும் சேர்ந்ததாக ஒன்று செயற்படுவது மனித ஆற்றலின் - படைப்பின் வெளிப்பாடாக உள்ளது. அதுவே உபயோக மாகவும் பல்நிலைப் பரவலாகவும் உச்சப் பயன்பாடாகவும் இருக்கிறது. வாழ்வுடன் எளிதிற் கலந்தும் விடுகிறது. இன்றைய நம் வாழ்வு எத்தகையதாக உள்ளது? நாம் எவற்றையயல் லாம் பயன்படுத்துகின்றோம்? அவை யயல்லாம் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன; உரு வாக்கப்படுகின்றன? அவற்றுக்குரிய கவர்ச்சி - அழகியல் எவ்வாறு இணைக்கப்படுகிறது? நாம் சமைக்கின்ற , சாப்பிடுகின்ற சோறுகூட , அதன் பாக முறைமை கூட இன்று மாறிவிட்டது. அதேபோல புழங்கும் மொழி மாறிவிட்டது. புழங்கும் பொருட்கள் மாறிவிட்டன; மாறுவது இயல்பு. எழுத்து மொழி மட்டுமல்ல பேச்சு மொழியின் தொனியும் (உச்சரிப்புக்கள்) விளக்கமும் வடிவமும் மாறிக்கொண்டிருக்கிறது. எங்களுடைய தாத்தா, பாட்டி காலத்திய சொற்களில் பலவற்றை நாம் விட்டு விட்டோம். அந்தத் தொனியே வேறு நம் தொனி வேறு. ஆனால் நாம் பேசுவதும் தமிழ்தான். அவர்கள் பேசியதும் தமிழ்தான். நம் பிள்ளைகள் பேசு வதும் தமிழே. இந்த மூன்று நான்கு தலைமுறை களில்தான் எத்தனை மாற்றங்களும் விடு படல்களும் புதுச்சேர்த்திகளும் அப்படியே உபயோகப் பொருட்களும்; அவற்றின் உருவாக்க முறைகளும் வடிவங்களும் கவர்ச்சியும் - அழகும்.

எனவே, நம் கவிதையும் இந்த மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் உட்படுவது தவிர்க்க முடியாததது. சுருங்கிய அல்லது ஒடுங்கிய ஒற்றைச் சுவட்டு வழியே அது தன் பயணத்தைத் தனித்து நிகழ்த்திக் கொண்டிருக்க முடியாது. தனி வாசிப்பின்போது எட்டப்படும் பொருள் ஆழப் புரிதல், உள்ளுணர்தல் கவிதையை மிக்க வசீகரத்துக்கும் அதன் சிறப்புக்கும் உச்ச மேன் மைக்கும் உரியதாகக் கொள்கிறது. இது நிகழ்கலை அனுபவத்தில் எட்டப்படுமா? என்று யாரும் கேட்கக் கூடும். சினிமா நமக்கு உச்ச அனுப வத்தைத் தரவில்லையா? வாசிப்பில் ஒரு கவிதை தரும் அனுபவத்துக்கு நிகரான, அதனிலும் மேலான அனுபவத்தை நல்ல சினிமா நமக்கு அளிக்கிறது. இது எப்படி? ஒரு ஒளிப்படம்(Pஜுலிமிலிஆrழிஸ்ரீஜுதீ) தரும் அனுபவம் இன்னொரு வகையில் பரிணமித்து வேறொரு வகையில் வேறொரு அனுபவமாக சித்திக்கி றது. வாசிப்புக் கவிதை நிகழ்கவிதையாகப் பரிமாணம் கொள்ளும்போது அதன் அனுபவம் இன்னொரு வகையில் உச்ச நிலையில் உச்ச சாத்தியங்களுடன் இருக்கும் . நம் வாழ்க்கை இன்று எதிர்கொள்ளுகின்ற சவால்கள் ஏராளம். அதனால் அது சந்திக்கின்ற நெருக்கடிகளும் அதிகம். நெருக்கடிகளின் தீவிரமும் அதிகமானது; வலியது. எனவே தனித்த, தூய, புராதன வெளிப்பாடுகள் மீதான ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இன்றைய மனம் நெருங்குவது குறை வடைகிறது. இதனாலேயே சீரியஸான விசயங்களில் அக்கறைப்படுவோர் அல்லது எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கையும் குறைவடைகிறது. அதற்காக சீரியஸ் என்பதன் அடிப்படை சிதைந்ததாகக் கொள்ளமுடியாது. அதற்கு அர்த்தம் இல்லை என்றும் இல்லை. ஆனால் அந்தத் தனித்த அம்சங்கள் இன்று வேறொரு நிலையை எட்டியுள்ளன. இதுவொரு வளர்ச்சி . இது பரிணாமம்.

நிகழ்கவிதை வெறும் கவியுரைப்பாக இல்லாமல், அது கூட்டிணை வில் இசையோடும் அரங்காடலோடும் கலக்க வேண்டும். கூட்டுக்குரல்கள், தனிக்குரல், ஒளி, இசை, அரங்கமைப்புக் கவிதையை வழங்குவோரின் அசைவு என இது விரிந்து புதிதாக மலரும் நிகழ்கவிதையாகிறது. இதன் அனுபவமே வேறு. இந்த அளிக்கை பார்வையாளரையும் பங்கேற்பாளரையும் உள்ளடக்கிய ஒரு சமூகச் செயல் வடிவமாகலாம். பல ஆளுமைகளின் சங்கமம் இது. அல்லது பல ஆளுமைகளின் கூட்டுவிளைவு. இப்படி அமையும் போது அது பல வண்ணங்களையுடையதும் எல்லாத் திசைகளிலும் எல்லாக் கோணங்களிலும் ஒளிதெறிக்கும் படியாகவும் மாறுகிறது. கவிதை சிறகுடையதாக மாறி எங்கும் பறந்து, தன் சிறகுகளை விரிக்கும் இயல்புடையதாகிறது. நம் சமகாலத்தய அல்லது அண்மைக் காலத்தைய கவிதைகளில் நிகழ் கவிதைக்குரிய கூடுதல் சாத்தியங்களையும் பல நுட்பங்களையும் கொண்ட பிரதி நிலாந்தனுடைய மமண்பட்டினங்கள்டு இன்னும் சில என்றால் மஜீத்தின் றியாஸ் குரானா போன்றோரின் பிரதிகள்.

தொண்ணூறுகளில் வந்திருந்த அஸ்வகோஸின் மவனத்தின் அழைப்புடு கவிதைகளும் முக்கியமானவை. நிகழ்கவிதைச் சாத்தியங்களை அதிகம் உட்சாரமாகக் கொண்டவை. ஆனால் துரதிஷ்டம் என்னவென்றால் இவை எதையும் யாரும் நிகழ்கவிதையாக்கவில்லை. பிரதிகளிலேயே நிகழ்கவிதைக்கான உந்துதலைத் தரக்கூடிய அம்சங்கள் இருந்தாலும் அதைப் பரீட்சார்த்தமாகக் கூட மநிகழ்கவிதையாகடு நிகழ்த்திப் பார்த்திருப்பதாக இல்லை. இது தான் துயரம். இது தான் நமது இழப்பு. இந்தத் துக்கம் நம்மை மீட்டெடுக்கும். அதுவே சாத்தியம்.

கவிதை கவிதை Reviewed by மறுபாதி on 9:09 AM Rating: 5

No comments:

Powered by Blogger.