தபின்
தின்னப்பட்டிருந்தன.
அநாமதேயமாக
உருவாகியிருந்த சிறு உலகொன்று
புறக்கணிப்பின் ஒளியினை நோக்கி
உருள்கிறது.
கதவில் தெறிப்படைந்த காற்று
சோர்ந்து வீழ்கின்றது தரையில்.
ஒருக்களித்திருந்த பூனையின்
மிக நீண்ட கனவுக்கு
தாபத்தின் மூச்சு
முற்றுப்புள்ளியை
வைத்துவிட்டிருந்தது.
உயிர்த்துளிகளின் சஞ்சாரம்
தொடர்கிறது
செத்துக் கிடக்கும்
உதடுகள் வழியே.
அவசரம் உட்புகுந்த தருணத்தில்
எப்படியும் நேர்ந்து விடுகிறது
விலகல்.
தத்தம் திசைகளில்
ஒவ்வொருவரும் பயணிக்கையில்
மூலையில்
தேம்பியழத் தொடங்குகிறது ஒரு முத்தம்.
தேம்பியழும் முத்தமொன்று
Reviewed by மறுபாதி
on
9:26 AM
Rating:
No comments: