$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

பாட நுால்களில் நவீன கவிதை

கற்றலும் கற்பித்தலும் - சில அவதானிப்புக்கள் சில கருத்துக்கள்




இலக்கியம் மனித வாழ்வோடு இயைந்த ஒரு கலை. மனிதனை அவனது வாழ்வைப் பேசுகின்ற விசாரணை செய் கின்ற அனுபவங்களைப் பகிர்கின்ற படரவைக்கின்ற ஒரு அரிய, மொழி சார்ந்த கலை அது. இலக்கியத்தில் மமகவிதைடுடு தனக்கேயான தனித்துவங்களோடு காலம் காலமாக மாற் றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் உட்பட்டு; உருவாகிவரு வது. கவிஞனாகிய ஒரு கலைஞன் தனது படைப்பை அளிக் கும்போதுதான் உணர்ந்ததைப் பகிர்ந்துகொள்ள முன்வரு கின்றான். மொழியின் அதிகப்படியான சாத்தியங்களை அவன் கவிதையினூடாக பரீட்சிக்கின்றான். தான் சஞ்சரிக் கும் உலகினை நோக்கித் தனது படைப்பினூடாக அவன் அழைப்பு விடுக்கின்றான். அந்த அனுபவ உலகத்துக்குள் வாசகனின் பிரவேசம் எந்த அளவிற்குச் சாத்தியமாகிறதோ அந்த அளவிற்கு அனுபவப் பகிர்வும் சாத்தியமாகிறது.

எமது கல்வித் திட்டத்தில் மொழிக்கல்வி வழங்குதலில் கவிதையின் பங்கு தவிர்க்க இயலாததாக இணைந்துள் ளது. சங்க இலக்கியங்கள் முதல் காப்பியங்கள் அதன் பின் வந்த அறம் மற்றும் சமய நூல் கள் கவிதை வடிவி லேயே அமைந்திருக்கின்றன. ஆரம்ப கால மொழிக் கல்வியில் இராமாய ணம், சாகுந்தலம் போன்ற கவிதை நூல்களில் இருந்து பாடப் பகுதிகள் அமைந்து வந்துள்ள மையும் நாம் அறிவோம். இன்று வரை பாரதியார் கவிதை, திருக்குறள், நாலடியார் என கற்ற லுக்குரிய பாடங்கள் காணப்படுவதையும் அறிவோம்.

மேற்சொன்ன பழந்தமிழ் நூல்களைக் கற்பித்த ஆசிரியர்கள் பாடல்களில் அரும்பதங்க ளின் பொருளை எடுத்துச் சொல்லியும் சந்திபிரித்து விளக்கியும் மாணவர்களுக்கு அவற் றைப் புரிய வைத்தார்கள். மரபு வழியில் அமைந்த படைப்புக்களுக்கு இவ்வகை விளக்கங்கள் வேண்டப்படுவதும் பாடசாலை மாணவர்களைப் பொறுத்தவரை அவசியமாகவே இருந்து வரு கிறது. கால மாற்றத்தின் விளைவாக இன்று நவீன கவிதை பாடநூல் களில் சேர்க்கப்பட்டுள் ளது. அக்கவிதை கற்பிப்பதும் கற்பதும் சில சங்கடங் களைக் கொண்டிருப்பதான நிலைமை ஒன்று தற்போது அவதானிக்கப் படுகின்றது. பொதுவாகவே நவீன கவிதையைப் பொறுத்த வரை மமபுரியவில்லைடுடுஎனக் குறை கூறுபவர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் என்ற ஸ்தா னத்தில் இருப்போர் இவ்வாறு கூற நேரிடுவது நியாயமற்றதும் துர்ப்பாக்கியமானதுமான ஒரு நிலையாகும். கற்பிக்கப்போகும் விடயம் பற்றிய தெளிவு கற்பிப்பவரிடம் இருந்தே ஆக வேண் டும். ஆனால் ஒரு பொதுவான அவதானிப்பில் கவிதையைக் கற்பித்தல் என்னும் கிரியை தொடர்பாக துக்ககரமான சில நிலைமைகள் அறியப்பட்டுள்ளன.
இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்னர் மஹாகவியின் மமசிறு நண்டு தரை மீது பட
மொன்று கீறும் சில நேரம் அதை வந்து அலை கொண்டு போகும்டுடுஎன்று தொடங்கும் கவிதை யில் பாடசாலை வகுப்பொன்றில் ஒரு ஆசிரியை கற்பிப்பதை அவதானிக்க நேர்ந்தது. கவி தையை முதலிலே ஆசிரியை மூச்சு விடாமல் வாசித்தார். பின்னர் மாணவன் ஒருவனை அதை வாசிக்குமாறு விடுத்தார். பின்னர் ஆசிரியரின் விளக்கம் இவ்வாறு அமைந்தது.

ஆசிரியர் - “நண்டு என்ன செய்ததாம்
மாணவர் - தரையில படம் கீறிச்சாம்
ஆசிரியர் - அலை என்ன செய்ததாம்
மாணவர் - அதைக் கொண்டு போச்சுதாம்“

இந்த வகையில் தான் இடையிடை சில விளக்கங்களோடு அந்தப் பாடம் நடந்தேறியது.

மஹாகவியின் கவிதையைப் படித்து அனுபவித்து அது தோய்ந்த ஒருவருக்கு இந்தப் பாடம் எப்படி இருந்திருக்கும் எனச் சொல்லத் தேவையில்லை. இது போன்ற பல கொடுமைகள் தமிழுக்கு நேர்ந்து கொண்டிருப்பதைப் பலரும் அவதானித்திருப்பார்கள். மொழியைக் கற்பிப்ப வர்கள் அதிலும் குறிப்பாக கவிதையைக் கற்பிப்பவர்கள் எத்தகைய ஒரு தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பொதுவாகவே மொழியைக் கற்பிப்பவர்களிடத்தில் மொழிசார் ஆளுமை மிகவும் சிறப் பாக இருக்கவேண்டியது அவசியம். சொல்லாட்சி, மொழியின் நுட்பம், செழுமையைக் கண்டறி யும் பக்குவம், நயக்கும் பண்பு, நயத்தைப் பகிர்ந்து கொள்ளும் ரசனை மற்றும் பக்குவம் என்பன ஒரு மொழி ஆசானிடம் இருந்தாக வேண்டிய பண்புகள். ஆனால் துரதிஷ்டவசமாக இன்றெல்லாம் வாசிக்கும் பண்பை வளர்த்துக் கொண்டு தமது ஆளுமையை உயர்த்திக் கொள்ளும் ஆசிரியர்கள் வெகு அரிதாகவே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நவீன கவிதை ஒன்றைக் கற்பிக்க முற்படும் ஒரு ஆசிரியர் எத்தகைய பக்குவத்தை உடையவராக இருக்க வேண்டும்? இது பற்றி நாம் மிகுந்த தெளிவான நோக்கு நிலை ஒன்றை உடையவராதல் வேண்டும். இன்று 10ம், 11ம் தரங்களில் எமது மண்ணின் கவிஞர்களான வ. ஐ. ச.ஜெயபாலன், கருணாகரன், சிவசேகரம், முருகையன், ஊர்வசி, சேரன் முதலான நவீன கவிஞர்களின் கவிதைகளும் தென்னிந்தியக் கவிஞர் அப்துல் ரஹ் மான், கவிஞர் சோ.பத்மநாதனின் மொழிபெயர்ப்பும் இன்னும் நீலாவணன், மஹாகவி முத லானோரின் கவிதைகளும் பாடங்களாக இணைக்கப்பட்டுள்ளன.

மேற்படி நவீன கவிதைகளைக் கண்ணுற்ற ஆசிரியர் ஒருவர் தமது நண்பரிடம் மமஒரு மண்ணும் விளங்குதில்லைடுடுஎன்று குறைப்பட்டுக் கொண்டதாக அறிய நேர்ந்தது. மேற்படி ஆசிரியரையோ அவர் போல சிரமத்துக்குள்ளாகிற ஏனையோரையோ மட்டம் தட்டுவதல்ல எனது நோக்கம். கவிதை என்னும் இலக்கியத்துறை இன்று கண்டுள்ள உச்சங்களை கவிதை யின் பலதரப்பட்ட நுண்ணிய தன்மைகளை அதன் பல் பரிமாணத் தன்மை யை எல்லாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது மொழி ஆசிரியர்களின் அவசிய கடமையாகிறது. நவீன கவிதை பற்றிய தருமுசிவராம், வல்லிக்கண்ணன் போன்றோருடையதும் அவர்களைப் போல் கவிதை பற்றிய பிரக்ஞையும் அறிவும் கொண்டோரான பிரம்மராஜன் விக்கிரமாதித்யன் போன்றோரது ஆக்கங்களையும் படித்திருக்க வேண்டியது அவசியம்.

கவிதையைப் படைப்பதும் படிப்பதும் வெவ்வேறான கிரியைகள். ஆயினும் இரண்டிற்குமே அடிப்படையாகச் சில பண்புகள் வேண்டப்படு கின்றன. சொற்களின் நேர்ப்பொருளோடு மாத்தி ரம் கவிதைகள் அமை வதில்லை. உதாரணத்துக்கு பாரதியின் மமநெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்டுடு என்ற கவிதையையும் மமஅக்கினிக் குஞ்
சொன்று கண்டேன்டுடு என்ற கவிதையையும் எடுத்துக் கொள்ளலாம். இதில் முதலாது கவிதை சொற்களின் நேரடி அர்த்தத்தோடு கவிஞனின் அனுபவத்தை நம்மில் தொற்ற வைக்கும் ஒரு முயற்சி. அதுபோல அன்றி இரண்டாவது கவிதை சொற்கள் தமது நேர்ப் பொருள் தாண் டிக் குறியீடாக உணர்த்தும் ஒரு நிலைமையை ஒரு அனுபவமாகத் தர விழைவது.

சொற்களை அவை அவை ஏற்கும் நேரடி அர்த்தங்களைக் கொண்டே பொருள் தரும்படி யாக ஆக்கப்படும் கவிதைகளும் உண்டு. சொற்கள் உள்ளீடாக பிறிதான விடயங்களைப் பேசும்படியாக ஆக்கப்படும் கவிதைகளும் உண்டு. இன்றைய நவீன கவிதைப் போக்கில் இவ்வாறான குறியீடுகள், படிமங்கள் கொண்ட ஆக்கங்கள் கவிதைகளாகி வருவது இயல் பாகியுள்ளது. அவ்வாறான ஒரு சொல் தன் பொருளைக் களைந்து அர்த் தங்கள் பலவற்றைப் புனைந்து கொள்ளும்படியாகப் பல்பரிமாணத் தன்மையுடன் திகழ்வது ஓர் இயல்பாகியுள்ளது.

என் பிரியமுள்ள உனக்கு

பிடி, அந்தக் குருவியைப் பிடி
என் நெஞ்சுக்குள் நுழை

அவர்களைக் கண்டதும் எனக்குள் இருந்த
குருவிகள் செத்தன - அந்த
இரண்டு கையிலும் தங்கள் முகங்களைத்
தூக்கி வந்தவர் துயரை

அறிந்ததும் எனக்குள் ஆறுகள் வற்றின
மலை இடிந்து சரிந்தது
உடம்பெல்லாம் வெந்து புழுத்தது - நான்
நார் நாராய் கிழிந்தும் போனோன்.

மேலுள்ள நவீன கவிதையில் கவிஞர் சோலைக்கிளி சொல்ல உத்தேசிப்பது எது எனப் புரிகிறதா? அவர் எத்தகைய அனுபவத்தை வாச கனிடம் தொற்ற வைக்க முனைகிறார்?

குருவிகள் எனும் சொல்லினூடாக அவர் எதைக் குறிப்பிடுகிறார்? “குருவிகள் செத்தன“ என்றும் சொல்லும்போது அவர் எதைச் சொல் லுகிறார்? என்றெல்லாம் கவிஞரது உலகத்துக்குள் நாம் நுழைய எத்தனிக்கவேண்டும். ஒட்டு மொத்தமாக அவர் எதைச் சொல்கிறார் எனக் கண்டறிய வேண்டும். இதுவே கவிதை ஒன்றை அனுபவிக்கும் வழி. அவ்வாறன்றி மேலோட்டமாக ஒரு கவிதையைப் பார்த்த மாத்திரத்தில் அதன் சொற்களுடைய நேர்ப் பொருளை விபரிக்க ஒருவர் முற்படுவாரானால் அவரது முயற்சி தோல்வியிலேயே முடியும். இன்றைய கவிதையைக் கற்பிக்க முற்படும் ஒரு ஆசிரியர் கவிதை யின் தளம், அதன் பழகு பிரதேசங்கள், அதன் செல்தொலைவு மற்றும் அதன் சூட்சும அர்த் தங்கள் என்பவற்றையயல்லாம் அடையாளங் காணவும் காட்டவும் கூடியவராய் அமைய வேண்டியிருக்கிறது. “சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா“ என்ற கவிதையை கற்பிப்பதற்கும் ““அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்““என்ற கவிதையைக் கற்பிப்பதற்கும் ஒருவர் பிரவேசிக்க வேண்டியி ருக்கும் உலகங்கள் வேறு வேறானவை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாட நுால்களில் நவீன கவிதை பாட நுால்களில் நவீன கவிதை Reviewed by மறுபாதி on 9:37 AM Rating: 5

No comments:

Powered by Blogger.