$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

றிச்சட் கோறி


Richard Cory

ஆங்கில மூலம்:- எட்வின் ஆ( r ) லிங்ரன் றொபின்சன்
தமிழில்:- செளஜன்யஷாகர்

றிச்சட் கோறி நகரத்துக்குச் செல்லுகையிலெல்லாம்
நடைபாதை வாசிகளான நாம் அவனைக் காண்போம்
அடி முதல் முடிவரை அவன் ஒரு கனவான்
அப் பழுக்கில்லாத ராஜகம்பீரம் அவனுடையது.

எப்போதுமே கனகச்சிதமாக இருக்கும் அவனது ஆடைகள்
பேசுகையில் அவன் ஒரு மமனிதனாகடு இருந்தான்
காலை வந்தனம் சொல்லுகையில் ஒரு உயிர்த்துடிப்பிருக்கும்
நடந்து செல்கையில் ஒரு ஒளிர்வு தெரியும்

மிகப்பெரும் செல்வந்தன் அவன்
ஒரு அரசனைக் காட்டிலும் உயர்வாக
ஒவ்வொரு அசைவிலும் அவன் கல்வியின் மேன்மை தெரியும்
காணுகின்ற யாருமே மமஇருந்தால் இவன் போலல்லவா இருக்க வேண்டும்டுடு
என ஏங்கும்படியாக இருந்தான் அவன்.

நாமோ எம் விடியலுக்காக நாளாந்தம் பாடுபட்டபடி
இறைச்சியில்லா வெறும் பாணைச் சபித்தபடி தின்று கொண்டு

அமைதியான கோடை கால இரவொன்றில்
வீடுசென்ற றிச்சட் கோறி ஒரு துப்பாக்கிச் சன்னத்தால்
தன்வாழ்வை முடித்துக் கொண்டான்!

றிச்சட் கோறி றிச்சட் கோறி Reviewed by மறுபாதி on 9:58 AM Rating: 5

No comments:

Powered by Blogger.