$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

தொலைவில் ஒரு வீடு

திவ்வியாவின் பக்கங்கள்

ஈழத்தின் கவிதை வரலாறு இன்னும் சரியாக எழுதப்படவில்லையயன்றே கூறவேண்டும். கவிஞர்களின் காலரீதியான வரிசைகளும், உதிரியாக எழுதப்பட்ட கவிஞர்கள் தொடர்பான குறிப்பிடத்தக்களவு எழுத்துக்களும் எம்மிடையே உள்ளனவாயினும் ஈழக்கவிதையின் தொட ரோட்டம், போக்குகள், பாணிகள் - பாணிமாற்றங்கள், விடயப்பரப்புக்கள் - இவற்றை நிகழ்த்தி முடித்த சமூகவரலாற்றுப் பின்புலங்கள், பொதுத் தமிழ் கவிதைப் பரப்பினுள் ஈழத்தழிழ் கவி தைகள் தனியடையாளம் என்பவற்றை ஒட்டிய ஆய்வுகளை இன்னும் நாங்கள் சரியான அர்த் தத்திற் செய்யவில்லை. குறிப்பிட்ட சில விலகலான உதாரணங்கள் போனால். பொதுவாக எங்களிடம் இருப்பது உடன்பாடுகளும், சில வேறுபாடுகளுமுடைய கவிஞர்களினதும், கவி தைகளினதும் பட்டியல்தான்.இதனால் ஈழக்கவிதை என்பது இன்னும் சரியாகத் திறக்கப்படாத ஒரு விடயப் பரப்பாகவேயுள்ளது.

இவ்வகைப்பட்ட நிலவரங்களுக்குள் சரியாக நிறுவப்படாத அல்லது போதுமானளவு முன் நிறுத்தப்படாத ஈழத்துக் கவியாளுமைகளுள் ஒருவராக தா.இராமலிங்கம் காணப்படுகிறார் தா.இராமலிங்கம் யார்? அவரது முக்கியத்துவம் என்ன?

பாடசாலை அதிபராக இருந்து ஓய்வுபெற்ற தா.இராமலிங்கம் யாழ்ப்பாணம் கல்வயலில் 1933 இல் பிறந்து, முற்றுகையிடப்பட்ட வன்னியில் 2008இல் இறந்து போனார்.இரண்டு கவிதைத் தொகுதிகள் (புதுமெய்க்கவிதைகள்- 1964, காணிக்கை -1965) மற்றும் உதிரியாகப் பிரசுரிக்கப்பட்ட பிந்திய கவிதைகளுமாக - அவை பெரும்பாலும் அலையிலும் மற்றும் புதுசு, சுவர் ஆகிய சஞ்சிகைகளிலும் வெளிவந்தன.

கவிதைகளுக்கூடாக எமக்குத் தெரியவரும் தா.இராமலிங்கம் ஒரு கிளர்ச்சிக்காரர் நவீன கவிதையின் பிரதான இயல்பும் அதுதான். அது சமூக நியமங்கள் பலவற்றையும் எதிர்ப்பது டன், வழமைப் பிரகாரமான வாழ்வு பற்றிய அர்த்தங்களையும் புதிய இடங்களுக்கு இடம்பெயர வைத்தது. அந்த வகையில் தா.இராமலிங்கத்தின் எழுத்துக்கள், குறிப்பாக 1960களில் யாழ்ப் பாண சமூகத்தில் மேலாதிக்கஞ் செலுத்திக் கொண்டிருந்த கருத்து நிலைகளுக்கு எதிர்ப்புறத் தில் இருந்தன; அவற்றை அவர் எள்ளி நகையாடி மகிழ்ந்தார். வெஞ்சினமும், அபத்தமும், கலகமும் அவரது உள்ளடக்கத்தினதும், மொழியினதும் ஊற்றாக இருந்தன. சாதியம், ஆணாதிக்க சமூகக் கருத்தியல் என்பன அவரது பிரதான பாடுபொருளாயிருந்தன. காதலும், காமமும் கசங்கி முயங்கும் வெப்பம் நிறைந்த ஒரு பெருஞ்சொல் வெளியை அவர் கட்டியயழுப் பினார். காமம் கிளர்ந்த மனிதர்களின் நெடுமூச்சுக்கள் அவரது கவிதைகளில் வசித்தன. தமிழின் நெடிய அகத்திணை மரபின் தொடரோட்டத்தின் சுவடுகள் தா.இராமலிங்கத்தின் கவி தைகளில் உட்புகுந்து வெளியேறின. மமகாமம் கொழுந்தெறிந்து / ஊனை உருக்கி / உறிஞ்சி எரிய...டுடு, மமமெய்முட்டிப் புலன்மோதும்டுடு அவரது பொருட்பரப்பு முடிவில்லாத பாலியல் விடுத லையை (விeமுற்ழியி யிஷ்ணுerழிமிஷ்லிஐ) நாடி நிற்பது. அவரது ஆண்களும், பெண்களும் பாலியல் வேட் கையின் வெவ்வேறு நிலைமைகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்; அலைக்கழிக்கப்படுபவர் கள். ஆனால், அவற்றை அவர்கள் மூடிப் பொத்தி வைப்பதில்லை. மம..... புகுந்த புதுமனையில் / கறந்த மனப்பாலைக் / காச்சி உறிஞ்சுவதற்கு / ஈரவிறகு தந்தார்./ / புகை குடித்து அடுப்பூதிப்/ புகைச்சூண்ட பால் குடித்தன்! / காலம் கழிந்ததன்றிக் / கனவு பலிக்கவில்லை./ அரை வெறி யில் வந்திடுவார் / மின்னுவது போலிருக்கும் / பாட்டம் ஓய்ந்து / சிலுநீரும் சிந்திவிடும் / போய்விடுவார்...டுடு எனக் கூறவும்த கடந்து போய் மமயானைத் தீ நோய் போக்கப் / படலை பல திறந்தன்...டுடு எனக் கூறவும் அவர்கள் பின் நிற்பதில்லை. ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபில் பெண்ணிய விடுதலை நோக்குடைய செறிவான கவிதை வரிகள் தா.இராமலிங்கத்திடம் வெளிப்பட்டுள்ளன.

அடிப்படையில் எந்தவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிர்ப்புறத்திலிருத்தல்தமுடிவற்ற விடுதலை வேட்கை என்ற அவரது அடிப்படையியல்பினைத் தமிழ் இனக்குழும விடுதலை சார்ந்து எழுதப்பட்டத குறிப்பாக அவரது பிற்பட்ட காலக் கவிதைகளிலும்கூடப் பலமாக அவதா னிக்கலாம். மஅகால மரணங்களையும்டுத முடிவற்ற மசாவிளைச்சல்டுகளையும், இரத்தக் கேணி களையும் அவை பேசிச் செல்கின்றன.

அவரது கவிதைகளைக் கூர்ந்து நோக்கும் எவரும் அவற்றுள் ஆழ உள்ளோடிச் செல்லும் ஆன்மீக விடுதலை நாட்டத்தினைக் கவனிக்கவே செய்வர். விட்டு விடுதலையாதலின் பேரெல் லையாய் அவர் அதனைத்தான் கண்டாரென வாதிக்க அவரது கவிதைகள் இடந்தருகின்றன. ‘‘அடிவீழ் அருவியின் / ஊற்றுச்சி காணவென்று / அருவிவிழும் பாறை மேலேறிச் செல்கின் றேன்’’ எனப் பிரகடனப்படுத்தும் அவர் ‘‘ஐந்துநதி பெருகி விழ / அலை நுரைக்கும் / சிந்தைப் பெருங்கடலின் / ஆழவடியினிலே முத்து விளைகிறது’’ என்கிறார். பூட்டற்ற வீடுஎனும் அவரது வரிகளும் ‘‘.....இங்கில்லை / எங்கோ தெரிகிறது / அங்கே நான் போகிறேன்’’ என்ற புறப்பாடும் இந்த அடித்தளத்திலிருந்து எழுந்தவை தான். சுருங்கக் கூறின் தா.இராமலிங்கத் தின் மனிதர்கள் சிற்றின்பத்திற்கும், பேரின்பத்திற்குமிடையில் யாத்திரை போகிறார்கள். விடு தலை நாட்டத்தின் வெவ்வேறு கட்டங்களில் நின்று சமர் புரிகிறார்கள். விடுதலையே அவரது அடிப்படைச் செபமும் - தியானமும்.

அவரது கவிமொழி அசாதாரணமானது. அவரது காலத்தில், அவரது மொழி தனியான ஒரு திசைப் பிரிவை சுட்டி நின்றது. அதனால் தான் கவிஞர் முருகையன் தா.இராமலிங்கத்தின் கவிதை நூலொன்றின் முன்னுரையில் அவரது ஒட்டுமொத்த கவிதை வெளிப்பாட்டைப் பற்றிப் பேசும்போது நம்மவர் நடுவில் ஒரு வேறான நோக்கும் - வெளிச்சமும் தோன்றுவதற்கு ஏது வாகும் என நம்புகிறேன்என அவரது கவிதைகள் பற்றிக் கூறுகிறார். அவரது கவிதை மொழி விசித்திரமாகப் பின்னப்படுகிறது. கொதிநிலையில் இருக்கும் உணர்ச்சியே அதன் மூல விசை யாகத் தொழிற்படுகிறது. அதற்கென ஒரு கதியுண்டு - அதனை வாசிக்கையில் அது எமது மனச் செவிகளில் ஒலிக்கிறது. ‘‘நேற்று கன்றீன்ற மாடு / மடியி னைக் / காகம் கொத்தித் / துவாலை இறைக்கிறது / பாவம் / வாயில்லாச் சீவன் / சுற்றிவரக் காகம்...’’ எனும் வரிகளில் படிக்கப்படும் சொற்களின் கதித கவிதை வரிகளுக்கு மேலும் கனம் சேர்த்து விடுகிறது.

சாதாரணமான புழங்கு மொழியை, கட்டும் முறையினால் தா.இராமலிங்கம் உருவாக்கும் அசாதாரணத்துவம், புதிய தரிசனத்தை உருவாக்கிவிடுவதுடன் ஈழத்துக் கவிதையின் மொழியை ஒரு புதிய திசையை நோக்கித் திறந்தும் விடுகிறது. உருவகமாயும் - படிமமாயும் - குறியீடாயும் அவரால் சொற்கள் விரித்தெடுக்கப்படுகிறது. சொற்கள் அவற்றின் நாளாந்த அடுக்கிலிருந்து கழன்று வேறொன்றாகி இன்னொரு உலகத்தில் திறக்கின்றன. ஆசார முட் டையும்கோடைக் கொதி நோயும்பச்சைக் கிருமிக்கூழாயும்புதிதாய் சேர்க்கையுறும் வார்த்தைகள் வேறொரு தளத்தில் வைத்து அர்த்தங்களைத் திறப்பதோடு அவரது கவிதை படிமங்களின் பெரும் பரப்பாகிறது. அவ்வகையில் நவீன கவிதையின் பிரெஞ்சுப் பள்ளியின் தொடர்ச்சியை அவரிடம் அதிகம் இனங்காண முடியுமாயினும், முருகையன் கூறுவதுபோல் உள்ளுறை உவமம், இறைச்சி எனும் உபாயங்கள் கொண்டு சொல்லாமற் சொல்லும் சங்கத் தமிழின் குரல் முற்றிலும் புத்தம்புதிய நவீனச் சூழலில் ஒலிக்கக் கேட்கிறது.இதேநேரம் நுஃமானும்த யேசுராசாவும் ஈழத்து நவீன கவிதையின் மூன்றாந் தலைமுறை யைச் சேர்ந்தவர்களே ஈழத்து நவீன கவிதையில் உருவ ரீதியாக நெகிழ்ச்சியுடைய கவிதை களை எழுதத்தொடங்கியதாக இனங்காண்கிறார்கள். தா.இராமலிங்கமும் இந்த மூன்றாவது ஈழத்து நவீன கவிதை மரபினைச் சேர்ந்தவர்தான். மேற்படி நுஃமானதும், யேசுராசாவினதும் கருத்தினை அடியயாற்றி மேலும் நகர்ந்து செல்லும்போது தா.இராமலிங்கம் அங்கம் வகிக்கும் மேற்படி மூன்றாந் தலைமுறையே ஒப்பீட்டளவில் ஈழத்துக் கவிதையில் நவீன பண்புகளை அதிகம் வெளிப்படுத்துபவர்களாக இருந்தார்கள் எனக் கூறமுடியும்.

இப்பின்னணியில் நின்று தா.இராமலிங்கத்தினை இன்று பார்க்கும்போது நவீன ஈழக் கவி தையின் முதன்மைத் தளகர்த்தராக அவரே தென்படுகிறார். நவீனத்துவத்தை வெறும் வடிவச் சங்கதியாக அல்லாமல், அதனை ஒரு மனோநிலையாக (விமிழிமிe லிக்ஷூ துஷ்ஐd) உட்கொண்டிருப்பது இராமலிங்கத்தின் கவிதைகளே என கூறத் தோன்றுகிறது. அவ்வாறு பார்க்கும்போது மஹா கவியும், நீலாவாணனும் இன்னும் முன்வந்த அனைத்துக் கவி ஆளுமைகளையுமே ஆரம்ப நவீனக் கவிஞர்களாகவே கொள்ளத் தோன்றுகிறது. தா.இராமலிங்கமே நவீனத்தை அதன் இயல்புகளோடு ஈழத்துக் கவிதைப் பரப்புக்குள் நுழைக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. மீயாதார்த்தமும் (றீற்rreழியிஷ்விது), அசாதாரணத்துவமும், நனவோடைத்தனமும் கூடிய அவரது எடுத்துரைப்புமுறை அதிகம் நவீனத்துவத்துவத்தின் பண்புகள் சார்ந்தது. நவீன கவிதையின் அடிப்படை இயல்பான கட்டற்ற தன்மையும், மனோரதியப் (யூலிதுழிஐமிஷ்உ) பாங் கினை முற்றாகக் களைதலுமான போக்கு அவரது கவிதைகளில் பேரளவில் சித்தியாகியிருக் கிறது.

அவ்வாறு பார்க்கும்போது ஈழத்தின் நவீன கவிதை அதன் முழு அர்த்தங்களோடும் தா.இராமலிங்கத்திடமே தொடங்குகிறது எனக் கூறலாம் என்பதோடு, இன்னொரு வகையில் அவரிடமிருந்து தொடங்கும் ஒரு ஈழத்து கவிதைப் போக்கையும் நம்மால் இனங்காண முடியும். குறிப்பாக 1990களுக்குப் பிந்திய ஈழத்துக் கவிதைப் போக்கின் விதைகள் அவரிடமே அதிகம் இருப்பதாகத் தோன்றுகிறது.

திவ்யா தனக்கு தா. இராமலிங்கத்தின் கவிதைகளில் பிடித்த கவிதைகளை ஒரு சிறிய கவிதையை முடிவுரைக்குப் பதிலாகத்தர விரும்புகிறாள்.

துயிலுகையில் பயங்கரங்கள்

துயிலுகிறேன்!

கனவுலகில் நிகழுகுது பயங்கரங்கள்;

சூரியனின் அனற்பிழம்பு வெடித்து

வீழ்கிறது சமுத்திரத்தில்!

திரை மோதுகுது பனைஉயரம்

ஆவிகக்கிக் கரைமீறி நிலம்மேவி

ஓடுகுது கொதிவெள்ளம்!

மரஞ்செடிகள் விலங்குமக்கள்

அவிந்து வெம்பி வதைந்தழிய

ஓங்குகுது பிணப்படையல்!

ஊன்கரைந்து சேறுபட

வீசுகுது கெடுநாற்றம்

துயிலுகையில்

கனவுலகில் நிகழுவன பயங்கரங்கள்!

தொலைவில் ஒரு வீடு தொலைவில் ஒரு வீடு Reviewed by மறுபாதி on 9:13 AM Rating: 5

No comments:

Powered by Blogger.