$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

வெள்ளை மாரனாரின் புனிதத்துக்குள் கட்டுறும் அபத்தத்தின் முகம்


- குறிப்புக்களும் மேலும் சில குறிப்புக்களும்


தரஹரன்

மறுபாதி இதழில் வெளிவந்த மபுனிதத்துக்குள் கட்டுறும் அபத்தத்தின் முகம்டு என்ற கட்டுரை யைக் கண்ட போது மனதில் இனம்புரியாத பல உணர்வுகள் ஏற்பட்டன. மமமதங்களின் தோலை உரித்து, அவற்றுள் புதைந்து கிடக்கும் புண்களையும் சீழ்களையும் அபத்தங்களையும் வெளிச் சமிடும் முயற்சி இது டுடுஎன்ற எதிர்பார்ப்பே இதற்குக் காரணமாகும். ஆயினும் கட்டுரையை வாசிக்கும்போதும் வாசித்து முடித்த பின்னரும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது; என்னை மஅசடு டு வழிய வைத்தது. இதற்குப் பின்வருவன காரணங்களாக அமைந்தன.

1. செத்த பாம்பிற்கு உயிர் கொடுக்கும் முயற்சி என்றோ ஆறிய கஞ்சி என்றோ இக்கட்டுரையைக் கூறலாம். சமணர்க்கு சம்பந்தர் ஏற்படுத்திய இடர் பாடுகள், தொல்லைகள் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே பல நூல்கள் வெளிவந்துவிட்டன. பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (சம்பந்தரும் சமண ரும்) சம்பந்தருக்குச் சார்பாகவும் சி.என்.அண்ணாத் துரை (இரத்த தாகம்) சமணருக்குச் சார்பாகவும் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் ( பெரியபுராணம் ஓர் ஆய்வு), திரு.வி.கல்யாணசுந்தரனார் (பெரிய புராண முன்னுரை - இராமகிருஷ்ணமி­ன் வெளி யீடு) ஓரளவு நடுநிலையில் நின்றும் தத்தம் கருத்துக் களை வெளியிட்டுள்ளனர். இன்னும் சில கட்டுரைக ளும் நூல்களும் வெளிவந்துள்ளன. ஆகையால் இக்கட்டுரை எவ்வகையிலும் புதியது ஆகா. இது அரைத்த மாவை அரைக்கும் முயற்சியே.

2. இக்கட்டுரையை வாசிக்கும்போது ஏற்பட்ட இன் னொரு முக்கிய நெருடல் மொழிக் கையாளுகை ஆகும். தான் வாசித்த நூல்களின் வழி பண்டித மொழியையும் நவீன மொழியையும் கலைச்சொற் களையும் கலந்து எழுதியுள்ளமை வாசகனுக்கு இடை யூறை விளைவிக்கின்றது. மபுனிதங்களின் கட்ட விழ்ப்புடு தீவிர கல்வியாளனுக்காக எழுதப்பட வேண் டியதில்லை. சாதாரண கல்வியறிவுடையோர்க்கும் மாணவர்க்கும் வேண்டியது. அதனைச் சாதாரண மொழிநடையில் கூறுவதன் மூலமே அவர்களுக்குப் புரிய வைக்க முடியும். மகட்டிறுக்கமான மொழிடுஎன யாரோ இருவர் பாராட்டுவதை விட நிறைந்த வாசகர்கள் புரிந்து கொள்ளும் மொழியாக இருப்பதே இவ்வாறான கட்டவிழ்ப்புகளுக்குத் தேவை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

3. இக்கட்டுரையில் (ஆசிரியர்) மயாழ் முரிப்பதிகம்டு பற்றிக் கூறும்போது, மமதிருநீலகண்டப் பெரும்பாணருடைய சுற்றத்தார் திருஞானசம்பந்தரின் பதிகத்தைச் சிறந்த முறையில் பாணர் யாழிலிட்டு வாசிப்பதைப் புகழ்ந்து கூற அதனைச் சகியாத சம்பந்தர் இசை உலகார் கண்டத்தி லும் கருவியினும் அடங்காவண்ணம் ம மாதர் மடப்பிடிடு எனும் திருப்பதிகத்தைப் பாடினார்டுடு என்று கூறியுள்ளார். மசகியாத சம்பந்தர்டு என்பதற்குப் பெரியபுராணத்தில் சான்றில்லை. சுற் றத்தார் மொழிகேட்டுப் பாணரே யாழில் இசைக்க முடியாதபடி பாடலைப்பாடுமாறு சம்பந்தரைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆக இது கட்டுரையாசிரியரின் ஊகமே. அதே வேளை இப்பதிகம் இசை உலகத்தார் கண்டத்திலும் கருவியிலும் அடங்காது என்பதை ஆசிரியர் நம்புவதாகவே மேற்சொன்ன வரிகள் எண்ணச் செய்கின்றன. ஆனால் இப்பாடற்பகுதிகள் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு கர்நாடக சங்கீத பாடத்திட்டத்துள் அடக்கப்பட்டுள்ளன என்பதைக் கட்டுரை ஆசிரியர் தெரிந்து கொள்ள வேண்டும். இப்பதிகம் இசை உலகத்தார் கண்டத்தில் அடங்கும் என்பது தெளிவு. ஆகவே இசை உலகத்தார் கண்டத்தில் அடங்காத பதிகமாக இதனை நம்பும் ஆசிரியர் ஏன் பாணரின் வேண்டுகோளிற்கு இணங்கவே சம்பந்தர் பாடினார் என்பதை திரிவுபடுத்த வேண்டும் என்பது விளங்கவில்லை.

4. மம......எனவே முத்தியாகிய வீடு பேறு திருநல்லூர்ப் பெருமணத்தில் சம்பந்தருக்குக் கைகூடியது என்பது கட்டுக்கதையே அன்றில் வேறில்லை. சம்பந்தர் மநாதன் நாமம் நமச்சி வாயவேடு எனக் கூறிச் சோதியில் புகுந்தது என்பது நடைமுறையில் இயல்புடைய கூற் றல்லடுடு(பக் -12) என்றுள்ளது. இதன் மூலம் மலமாசை நீக்காத சம்பந்தர் சோதியில் புகுந்த தையே அவர் மநடைமுறையில் இயல்புடைய கூற்றல்லடு என்கிறார் என்பது தெளிவு. ஆக , மசோதியிற் புகுதல்டுத மஇறை கூற்று டு என்பவற்றை அவர் நடைமுறையில் இயல்புடைய கூற் றாகவே கருதுகிறார் போலும். இதே போல (பக்-17) மசமணரைக் கொல்லும்படி சொல்லியும் துணை நின்றும் தூண்டியவருமான சம்பந்தர் ஏழ் நரகிடை வீழ்ந்து துன்புற வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை டு என அங்கலாய்க்கின்றார். இவ்வாறான கூற்றுக்கள், இவ ரின் மதநம்பிக்கையையும் மதச்சார்பையும் பட்டவர்த்தனமாக்குகிறது. இந்து சமயம் இந்து தத்துவம் எனும் சொற்களூடாகத் தன்னை ஒரு நடுநிலையாளனாகக் காட்ட ஆசிரியர் எடுத்த முயற்சியை தோல்வியுறச் செய்வதோடு இந்துத்துவ நம்பிக்கையாளனாக இவரை இனங் காட்டுகின்றது.

5. இவ்வாறு அமையும் மேற்சொன்ன (04) கூற்றுக்களும் கட்டுரையிலமைந்துள்ள சித் தாந்த விளக்கங்களும் ஆசிரியரின் அங்கலாய்ப்புக்களாக அமைந்துள்ளனவே அன்றி கட்டு ரையின் நோக்கத்தினை சீர்மைப்படுத்த உதவுவதாக இல்லை. பிறிதொரு வகையில் ஆசிரியர் தன் பன்முகத்தன்மையை இனங்காட்ட எடுத்த முயற்சியாகவே உள்ளது. இதன் விளைவாக இக்கட்டுரை தன் நோக்கத்தின் நின்று விலகி சைவ விளக்கக்கட்டுரையாக அமைந்துள்ளது. அந்த வகையில் ம கவிதை டு பற்றிய மறுபாதி இதழில் இக்கட்டுரை தேவையா என்ற கேள்வி மேற்கிளம்புகின்றது.

6. மதருக்கவாதத்தினாலும் மந்திர தந்திரத்தினாலும் ஏலவே சமண பெளத்தரை விரட்டிய சம்பந்தர்டு (பக் - 16) எனும் ஒரு தொடர் கட்டுரையில் உள்ளது. மவிரட்டிய சம்பந்தர்டு என்பது இறந்த காலம் காட்டும் பெயரெச்சம்; மஏலவேடு என்பதும் இறந்தகாலக் குறிப்புச் சொல். இவ் வாறு நடந்திருப்பின் ஏன் பின்பும் அனல் புனல் வாதங்க ளைச் சம்பந்தர் நிகழ்த்தியிருக்க வேண்டும்? ஆகவே இது மஏலவே டு சமண பெளத்தரை விரட்ட முற்பட்ட என்று வருதலே சாலப் பொருத்தமானது.

இவ்வாறு விரட்ட முடிந்திருப்பின் பின்பு ஏன் சமணபெளத் தர்களைச் சம்பந்தர் முதலானோர் மவதம்டு புரிந்திருக்க வேண்டும்? சமணர்களோடு பல்வேறு சந்தர்ப்பங்களில் வாதங்கள் பல நிகழ்த்தி அவர்களை நாயன்மார்கள் தோற் கடித்த வரலாற்றை நாம் பெரிய புராணம் எங்கும் காணமுடி கிறது. ஆனால் பெளத்தர்களுடன் நடத்திய வாதங்கள் குறைவு. அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பெளத்தர்களோடு நடந்த வாதங்களில் வெல்லமுடியாத கார ணத்தினால் அவர்களோடு வாதம் நடத்துவதை தவிர்த்தார் கள்; கொன்றார்கள்; ஊனப்படுத்தினார்கள். உதாரணமாகச் சம்பந்தர் பெளத்த துறவி மீது இடிவிழச் செய்து கொலை செய் தமையையும் மாணிக்கவாசகர் தன்னோடு வாதம் புரிந்த பெளத்த துறவிகளை ஊமையாக்கியமையையும் குறிப்பிட லாம். பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் மஎல்லையில்லாமல் அறிவின் அடிப்படையில் வாதம் செய்வதையே தொழிலாகக் கொண்டனர் பெளத்தர்கள். அவர்களுடைய தருக்கமும் அறிவு வாதமும் மிக நுண்மையானவை....... இதனாலேயே ஆதி சங்கர பகவத்பாதர் மிக நுணுக் கமான அறிவுவாத முறைகளைக் கையாண்டு பெளத்தர்களை எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது என நினைப்பதில் தவறில்லைடு (பெரியபுராணம் ஓர் ஆய்வு -பக்-120-127) என் கிறார். ஆக இந்துக்களின் தத்துவ வளர்ச்சிக்கு ஒரு வகையில் அடிப்படையாக, உந்து சக்தி யாக இருந்தது பெளத்தம் என்பது தெளிவு. ஆக மஇக்கட்டுரை ஆசிரியர் கூறுவதுபோலடு தருக்க வாதத்தால் சம்பந்தர் மட்டுமல்ல வேறு நாயன்மார்களாலும் பெளத்தர்களை விரட்ட முடியவில்லை.

7. கட்டுரையின் இறுதிப்பந்தியில் ஆசிரியர், பின் நவீனத்துவம் சார்ந்த கருத்துக்களான மமறுவாசிப்பு, எதிர்மறைக்கூறுகளைத் தேடல், ஒழுங்கமைப்புக்களைச் சிதைத்தல் போன்ற வற்றைக் கூறிடுத அதன்வழி நவீன ஆய்வுகளைச் செய்தல் மூலம் தமிழ் இலக்கியம் உரம் பெற்று வளரும் என்கிறார். இக்கூற்றின் வழி அறம், மதச்சார்புநிலை, புனிதத்துவம் போன்றன முதன்மை பெறமுடியாது. ஆனால் இவ்விரு கருத்து நிலைகளும் சமாந்தரக் கோடுகளாகக் கட்டுரையயங்கும் விரவிக்கிடக்கின்றன. இது ஆசிரியரின் அக முரண்பாட்டையே எடுத்துக் காட்டுகின்றது.


இவ்வாறான அரைத்த மாவை அரைக்கும் முயற்சியை விடுத்து சம்பந்தர் சார்ந்த தனித்து வமான ஆய்வுகளை மேற்கொள்வதே மேலானது. சம்பந்தரையும் பெளத்தத்தையும் பற்றிப் மபோடுபோக்கானடு கட்டுரைகளே வெளிவந்துள்ளன. தனித்துவமான ஆய்வுகள் வெளிவர வில்லை. அதனை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கலாம். இதற்கான இரு குறிப்புக்களை மட்டும் இக்கட்டுரை ஆசிரியருக்குச் சமர்ப்பிக்றேன்.
1. பெளத்த தர்க்கவாதிகள் பலர் தமிழர்களாக இருந் தும் அவர்களின் அறிவு நிலைப்பட்ட வாதத்தன்மை யால் மக்கட் செல்வாக்கை அவர்களால் பெரிதும் பெற முடியவில்லை. மஅறிவுடைய பெருமக்களையே டு அவர் களால் கவரமுடிந்தது. முன்னர் குறிப்பிட்ட அ.ச.ஞான சம்பந்தனின் கூற்று இதற்குத் தக்க சான்றாகும். இத னாற்றான் போலும் சமயகுரவர்கள் சமணர்களோடு இணைத்தே பெளத்தர்களைத் தாக்கினார்களே அன்றி பெரிதும் தனித்துச் சுட்டவில்லை; வாதங்களை அதிகம் நிகழ்த்தவும் இல்லை. தமது மேலாண்மைத்தனத்தால் பெளத்தர்களை அடக்கினார்களே அன்றி வாதில் பெரு வெற்றியீட்டவில்லை என்றே கூறலாம்.

2. சம்பந்தரின் திருமுறைப்பாடல் வைப்பில் மூன் றாம் திருமுறையில் உள்ள மகாட்டுமாவதுரித்துரிடு எனத் தொடங்கும் திருவாலவாய்ப் பதிகத்தில் இடம் பெறும் பாடலே,

மம மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத்திரு ஆலவா யயருள்
பெண்ணகத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே டுடு என்பதாகும்.

இதற்கு உரையாசிரியர்கள் மமஎங்குமுள்ளவனாக உள்ள ஆலவாயானே பெளத்தப் பெண் துறவியரிடமும் கொடிய சமணர்களிடமும் உள்ள கல்வியைப் பழிக்க, இல்லாதொழிக்க எனக்கு அருள்புரிவாய்டுடு என உரை செய்துள்ளனர். இவ்வுரை தவறானதாகவே எமக்குப்படுகி றது. இறுதி இருவரிகளுமே முக்கியமானவை. பெண்ணகம்- பெண்துறவியர் ; எழில் - அழகு; சாக்கியர் - பெளத்தர்; பேயமண் - சமணர்; மமபெண்ணகத்து எழிற் சாக்கியப் பேயமண் எனும் தொடர் அழகிய பெளத்த சமணப் பெண் துறவியர்டுடு என்றாகிறது. தெண்ணர் - அறிவிலிகள் (கழகத்தமிழகராதி) (உரையாசிரியர் சிலர் மகொடியோர்டு எனப் பொருள் கொள்கின்றனர்) என் றாகிறது. அதாவது அழகிய பெளத்தப் பெண் துறவியர், சமணர்கள் எனும் அறிவிலிகளின் கல்வியைப் பழித்தல் என வரும். அறிவிலிகளின் அறிவை ஏன் பழிக்க வேண்டும்? அறிவிலி களுக்கு அறிவை அளிக்க வேண்டுமே தவிர பழித்தல், இல்லாதொழித்தல் என்பன செய்தல் நாயனார்க்கு அடுக்கும் செயலாகுமோ? அதிலும் திடீர் என்று பெண் துறவிகளைச் சம்பந்தர் தன் பாடலில் இட்டது ஏன்? ஆண் துறவிகளின் கல்வியை பழிக்காது விட்டது ஏன்? எனும் வினாக்களெல்லாம் மேற்கிளம்பி நிற்கின்றன. ஆகவே கற்பழித்தல் என்பதை உரையாசிரியர் கள் கூறுவது போல் கல்-பழித்தலாகக் கொள்ள முடியாது. மகற்பழித்தலாகவேடு கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ளப்படின் இந்துத்துவத்தின் புனிதப் படிமமான சம்பந்தர், அழகிய, பெளத்த சமணப் பெண்துறவிகளைக் மமகற்பழிக்க இறைவனிடம் வரம் கேட்டார்டுடு என்றாகின் றது. இக்குறிப்பு இந்துத்துவப் புனிதர்களுக்கும் வழிபடுநர்களுக்கும் சமர்ப்பணம்.

இங்கு இடம்பெற்ற எல்லாக் குறிப்புக்களின் நோக்கமும் யாருடைய மனதையும் நோகடிப்ப தற்கு அல்ல. ஆரோக்கியமான ஆய்வுகள் வெளிவர வேண்டும் என்ற வேணவாவே.
வெள்ளை மாரனாரின் புனிதத்துக்குள் கட்டுறும் அபத்தத்தின் முகம் வெள்ளை மாரனாரின்  புனிதத்துக்குள் கட்டுறும் அபத்தத்தின் முகம் Reviewed by மறுபாதி on 10:17 AM Rating: 5

No comments:

Powered by Blogger.