$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

நான் முதிரும் ரோஜாப் புதர்

சண்முகம் சிவகுமார்

பகிர்ந்து கொள்ளப்படாத வார்த்தைக்குள்

ஒளியில் மிதக்கும் பறவை

ஒருமென் உணர்வு

கவிதையாக வாழும் மனம்

பூக்களோடு வனம் நீள்கிறது

நெரிசல்களில் வாழும்

எனை

காப்பாற்றப்பட வேண்டிய ஒரு

மகிழ்ச்சியை

பொழியக் காத்திருக்கும்

மேகத்தை

உயிருள்

எழும் கற்பகச் சோலையை

அது மலர்த்திக் களிக்கிறது

நாயின் பசியோடு

கையிலையை தூக்கும் நான்

சிவனோடு முரணுறும் பொழுது,

ஒருநாள், இப்படி விதைகளோடு

மிகப் பெரிய

ஒரு நாளாக ஆகிறது

பின்,

காயங்களிலிருந்து

நான்

பொன்னிற ஆடைகளை நூற்று

அணிகிறேன்

வாழ்க்கை,

ரோஜாக்கள் புதராவது போல்

மாற்றமுறுகின்றது.

நான் முதிரும் ரோஜாப் புதர் நான் முதிரும் ரோஜாப் புதர் Reviewed by மறுபாதி on 8:57 AM Rating: 5

No comments:

Powered by Blogger.