$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

என் அறையில்

ஆங்கில மூலம்- துர்க்கா பிரசாத் பண்டா

தமிழில்- சௌஜன்யஷாகர்


இங்கேதான்

நசுக்கப்பட்டுவிட்ட நானை

சீராக்கி மடித்து அலுமாரியில் வைத்திருக்கிறேன்

இங்கேதான்

என்னுள்ளே பேயாய்க் குடி கொண்ட

அடக்கவியலா ஆசைகளைப்

பூட்டி வைத்திருக்கிறேன்

இங்கேதான்

காயம்பட்ட என் அகங்காரத்துக்கு

பச்சாத்தாபத் தைலம் தடவிக் கொள்கிறேன்.

இங்கேதான்

நிலைக் கண்ணாடி முன் நிர்வாணமாகி

அழுகிப் போன என் ஆணவத்தை

காயம் நக்கும் அடிபட்ட நாய்போல

நக்கிக் கொள்கிறேன்.

இங்கேதான்

வயிறுமுட்டக் குடித்துவிட்டு

என்பரம எதிரிகளை

மிக மோசமான தூ­ணைகளால்

சபித்துக் கொட்டுகிறேன்.

இங்கேதான்

உலகுக்கெதிரான என் போரினைப்

பிரகடனம் செய்கிறேன்.

விடிந்ததும்

ஓசையின்றித் தலைகுனிந்து

என் பேடித்தனத்தால்

உதடுகளை

இறுக மூடியபடி

வெளியேறுகிறேன்.

என் அறையில் என் அறையில் Reviewed by மறுபாதி on 9:04 AM Rating: 5

No comments:

Powered by Blogger.