வோல்ட் விட்மன்
தமிழில்: நலங்கிள்ளி
இவை யாவும் உண்மையாகவே
எல்லாக் காலங்களிலும் எல்லா நாட்டிலுமுள்ள
எல்லா மாந்தர்களின் சிந்தனைகளே.
இவை எல்லாமே, என்னிடமுள்ள
சுயமான சிந்தனைகள் அல்ல.
என்னுடையவை போலவே
இவ்வெண்ணங்கள் யாவும்
உங்களுடையவையாக இல்லாமற் போகுமானால்
இவை பயன் அற்றனவே
அல்லது அவற்றோடு வைத்தெண்ணத்தக்கனவே!
இவை யாவுமே ஒரு புதிராகவும்
புதிரை விடுவிக்கும் விடையாகவும்
இல்லையயனில் பயனற்றனவே!
இவை தொலைவிலிருப்பது போலவே,
அண்மையிலும் இல்லையயனில்,
பயனற்றனவையே.
இது நீரும் நிலமும் எங்கெங்கே உண்டோ
அங்கெல்லாம் விளைகின்ற பசும்புல்.
இதுவே பூமிக் கோளத்தினைக்
குளிப்பாட்டுகின்ற பொதுக்காற்று
(நெடுங்கவிதையின் ஒரு பகுதி)
புல்லின் இதழ்கள்
Reviewed by மறுபாதி
on
9:13 AM
Rating:
No comments: