$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

புகழுடை நதியின் நீர்ப் பெருக்கிடம்

The rapids of a Great rever

பென்குயின் தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழியாக்க நெடுந்தொகை
தொகுப்பு- லஷ்மி ஹோம்ஸ்ரோம், சுபஸ்ரீ கிருஷ்ணசாமி, கே. ஸ்ரீலதா
விலை-499.00 இந்திய ரூபாய்
ISBN- 978-0-67-008281-0

..............................................................

பாக்கு

ண்மைய ஆண்டுகளில் தமிழ்க்கவிதைகளின் ஆங்கில மொழியாக்குகைகள் பலவும் வந்துகொண்டுள்ளன. இவற்றுட் குறிப்பிடத்தக்கனவான செல்வா கனகநாயகம் அவர்களால் வெளியிடப்பட்ட Lutesong and Lament(2001) என்னும் ஈழத்தமிழர் சிறுகதை மற்றும் கவிதைகளின் தொகுப்பு ,கதாவினால் வெளியிடப்பட்ட முனைவர் கே. எஸ். சுப்பிரமணியத்தாற் தொகுக்கப்பட்ட Tamil new poetry (2005) ஆகியவற்றின் தொடர்ச்சியாகஇ உலகப் புகழ் பெற்ற பென்குயின் வெளியீட்டகம் இந்த வருடத்தின் முதல் மாதங்களில் (ஏப்பிரல் 2009) The rapids of a Great river எனும் பெயரிலான இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ்க் கவிதையின் ஆங்கில மொழியாக்க நெடுந்தொகை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தமிழ்க் கவிதையின் நெடுமரபு பற்றிய நீண்ட முன்னுரைப் பகுதியோடு காணப்படும் இந்த நெடுந்தொகை இரண்டு பகுதிகளையுடையது. முதற் பகுதி சங்கக்கவிதைகள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள், சைவத்திமுறைகள், சேக்கிழார், நம்மாழ்வார், ஆண்டாள், கம்பர், சித்தர் பாடல்கள், தாயுமானவர், திரிகூடராசப்பக்கவிராஜர், கோபாலகிருஷ்ணபாரதி என்போரது எழுத்துக்களையுடையது. இரண்டாம் பகுதியில் பாரதி முதல் குட்டிரேவதி வரையான 43 கவிஞர்களது தெரிந்தெடுக்கப்பட்ட கவிதைகளையுடையது.

இத் தெர்குப்பில் பிரமள், சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம், எம். ஏ நுஃமான், சங்கரி, சு.வில்வரத்தினம், கி.பி அரவிந்தன், திருமாவளவன், ஊர்வசி, சோலைக்கிளி, செழியன், சேரன், மைத்திரேயி, பாலசூரியன், அவ்வை, சிவரமணி, பா.அகிலன் முதலான பதினேமு ஈழத்துக் கவிஞர்களது கவிதைகளின் மொழியாக்கங்களும் இடம் பெற்றுள்ளன.

தமிழ்ப்படைப்புலகை இத்தொகுப்புக்கள் பரந்தவொரு வாசக வட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய பணியினை ஆற்றியுள்ளன. என்ற போதும் புகழுடை நதியின் நீர்ப் பெருக்கிடம் இன்னும் தமிழின் முக்கிய குரல்களைப் பதிவு செய்யாது விட்டுள்ளதெனவே தோன்றுகிறது.
புகழுடை நதியின் நீர்ப் பெருக்கிடம் புகழுடை நதியின் நீர்ப் பெருக்கிடம் Reviewed by மறுபாதி on 10:39 AM Rating: 5

No comments:

Powered by Blogger.