த.மலர்ச்செல்வன்
பேய் நெல்லுக்காய வைக்கும்
மஞ்சள் வெயில் பொழுதில்
பாதை தரை தட்டாது
ஆற்றைக் கிண்டுகின்றது.
ஆற்றில் தத்தளிக்கின்ற
பாதையை விழுங்க
முயலும் முதலை
வாயை ஆவென்று விரிக்கின்றது.
பாதைக்காரன்
பாசாங்கு காட்டிக்காட்டி
பாதையைச் சுற்றுகிறான்.
முதலை வேகம் கொண்டு
பாதையில் முட்டி
மூர்க்கம் கொள்ள....
பாதைக்காரன் மண்டையில்
ஒருபோடு போட்டான்.
முதலை திமிறி மறைய
பாழிலிருந்து வெளிவருகின்ற
புண நாற்றம்
பாதையைச் சூழ்ந்து
பயம் காட்ட
பாதை தடாரென்று
தரை தட்டி
பறிக்கிறது
பிணக்குவியலை.
தரை தட்டா பொழுது
Reviewed by மறுபாதி
on
9:16 AM
Rating:
No comments: