$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

கடவுளின் நாவிலிருந்து அவர்கள் எழுதிச் சென்றார்கள்

கனகரமேஸ்

வதை சூழ் ஆத்மாவின்

கிழிபடும் இதழ்களுக்கிடையில்

சிக்கிக் கிடந்தது வார்த்தை

துக்கித்த இருளைப்

பிரவகிக்கும் நோக்குடன்

அதன் விழிகளில் துலங்கும்

கூர்மை

என்னை வேட்டையாடத்

தயாராகவே இருந்தது.

வன்மம் குடிகொள்ள

குதறும் வார்த்தைகளை

கூரிய அம்பாக்கி

சமருக்குத் தயாராகும் கணத்தில்

கடவுளின் நாவிலிருந்து

அவர்கள் எழுதிச் சென்றார்கள்

நான் ஏலவே கொல்லப்பட்டவன்

என்பதை

கடவுளின் நாவிலிருந்து அவர்கள் எழுதிச் சென்றார்கள் கடவுளின் நாவிலிருந்து அவர்கள் எழுதிச் சென்றார்கள் Reviewed by மறுபாதி on 8:59 AM Rating: 5

No comments:

Powered by Blogger.