$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

தொலைவில் ஒரு வீடு

திவ்வியாவின் பக்கங்கள்

சில கவிஞர்கள் இருக்கிறார்கள் மற்றவர்களுக்குப் புரியக்கூடாது என்பது போலவே எழுது கிறார்கள், சிலவேளை அதனைத் தமது மேதமை என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்ற பொருள்பட பல நண்பர்கள், பல தடைவை, கவிதையுட்படப் பல கலைப் படைப்புக்கள் பற்றியும் கூறக் கேட்டிருக்கிறோம்.

ஒரு புறம் அருந்தலான சில வெளிப்பாடுகள் ஒருவேளை மேற்படி குற்றச்சாட்டிற்குப் பொருத்தப்பாடுடையதாக இருக்கலாம். ஆனால் மறுபுறம் எந்தவிதத் தயக்கமுமின்றி பெரும் பாலான படைப்புக்கள் மீதுங் கூட இந்தவிதமான குற்றச்சாட்டுக்கள் மிக வேகமாக வீசி எறியப் படுவதை எமது கலை - பண்பாட்டுச் சூழலில் முடிவின்றிப் பார்க்க முடிகின்றது. இதனைச் சாதாரணமானவர்கள்மட்டுமின்றி பேர்பெற்றபடைப்பாளிகள் - புத்திஜீவிகள் எனப்படு வோர் - இலக்கியம் கற்பிப்போர் எனப் பலரும் செய்கிறார்கள்.

மேற்படி குற்றச்சாட்டுக்களின் நியாயந்தான் என்ன? கவிதையின் புரிபடாத் தன்மை என் பது முழுக்க முழுக்க குறித்த படைப்பும் படைப்பாளியும் சார்ந்த பிரச்சினைதானா? அல்லது இந்தப் பிரச்சினை படைப்புகளை நுகர்வோர் இரசிகரோடு சம்பந்தப்பட்டுள்ளதா?

பொதுவாக எழுதப்படுவன/ படைக்கப்படுகின்ற யாவும் யாவரும் புரிந்து கொள்ளத்தக்க வாறு - மபாமரருக்கும் விளங்குமாறுடு( யார் பாமரர்- எதனால் பாமரர்?) அமைய வேண்டும் எனப் பலர் கடுந்தொனியில் ஆலோசனை கூறக்கேட்கிறோம். இந்தப் பிடிவாதமான கலை- இலக்கியங்கள் தொடர்பான முன் நிபந்தனையும் நிலைப்பாடும் ரசிக நிலையில் உண்மையா னதும் யதார்த்தமானதும் தானா? அதாவது எல்லாமும் எல்லோருக்கும் என்ற வாசகம் நடை முறையில் சாத்தியமானதும் உண்மையானதுமா? எல்லோருக்கும் விளங்குமாறு எழுதுவது எப்படி?

பால், இனம்,இனத்துவம்,வயது,புவியில் காலநிலைப் பின்புலங்கள்,மத,மொழி வேறுபாடு கள், நம்பிக்கை மனப்பாங்கு வேறுபாடுகள் என்பன சார்ந்து அவரவருக்கென, அவருக்கான பார்வைகளும்- புரிதல்களும், நாட்டங்களும்,தெரிவுகளும் உள்ளன. நிச்சயமாக எல்லாம் எல்லோருக்கும் அல்ல. கவிதைக்கும் எந்தவொரு கலைவடிவத்திற்கும் கூட இதுதான் நியதி. அவரவருக்குரிய உலகங்கள் - அவரவருக்குரிய பாடுபொருட்கள்-கேட்டல்கள், அவரவருக் குரிய யாத்திரைப் பாதைகள், அவரவர் பாதையில் அவரவர் சந்திக்கும் விடயங்கள் என்று தான் யதார்த்தங்கள் உள்ளன. அறிந்தோ,அறியாமலோ- விரும்பியோ, விரும்பாமலோ எல் லாக் கவிதைகளும், கவிஞர்களும் தமக்குரிய இலக்குகளையும்,இலக்கு வாசகர்களையும் கட்டமைத்திருக்கிறார்கள். நாங்கள் எளிமையாக நம்புவது போல் எல்லாமும் எல்லாருக்கு மாக இல்லை. சிலவேளை இந்த இலக்கு ரசிகர்களின் வட்டம் விரிந்திருக்கலாம். சிலவேளை சுருங்கியிருக்கலாம். ஆனால் இலக்குகள் உள்ளன.

ஆகவே எவரொருவரும் எல்லோருக்குமாக எழுதுவதில்லை. யாராவது ஒருவர்தான் தமிழ்கூறு நல்லுலகு முழுமைக்குமாக - அது கடைந்தேறுவதற்காக எல்லோரும் விளங்கிக் கொள்ளுமாறு எழுதுவதாகப் பிரகடனப்படுத்தினாலும் அவ்வாறு யதார்த்தத்தில் நடைபெறுவ தில்லை.

இதனைச் சற்றுப் பாரம்பரிய அறிவியல் துணைகொண்டும் விளங்க முனையலாம். மனி தப் புலன்கள் அடிப்படையிற் வெளிவுலகத்தினை, அகவுலகிற்கு எடுத்துச் செல்லும் வேலையை மட்டுமே செய்கின்றன. இதனைப் புலனுணர்வு என்கிறோம். அகவு லகோ, புலன்கள் வெளியுலகிற் கண்டவற்றை அல்லது மேற்படி புலனுணர்வினை அதனைத் தாங்கிவரும் நரம்புமண்டலத்திடம் இருந்து அவ்வாறே பெற்றுக்கொள்வதில்லை. பதிலாக, மூளையில் ஏற்கனவே பதியப்பட்ட தனிமனிதர்களின் விடய அனுபவத்துடன் கலந்திணைந்தே அது புறவுலகை விளங்கிக் கொள்கிறது. இதனைப் புலக்காட்சி என்பர். இந்தப் புலக்காட்சியினடியாகவே ஒன்றைப் பற்றிய எமது புரிதல்கள் அமைகின் றன.எனவே காணல் - கேட்டல் - வாசித்தல் என்பன எல்லோருக்கும் மஒன்றாகடு இருக்கலாம். ஆனால் புரிதல் ஒன்றல்ல, ஏனெனில் அவை புலக்காட்சிகளால் வேறுபடுத்தப்படுகின்றன. சாதி, வர்க்கம், பால் உட்பட்ட சமூக இருக்கை நிலை சார்ந்த பல்வேறு காரணிகள் இரசிகர்க ளின் வேறுபட்ட அனுபவங்களிற்கு அடிப்படையாகவுள்ளன. ஆகவே யதார்த்தத்தில் ஒவ் வொருவரினதும் புரிதல்களும் வேறுபட்டவை. அதனாற்றான் எல்லாமும் எல்லோருக்கும் புரியும் என்றோ- புரிய வேண்டும் - ஒரேவிதமாகப் புரிந்து கொள்ளப்படும் என்றோ எதிர் பார்க்க முடியாதென்பர். இது ஒரு அடிப்படையான விடயம். இந்தப் பின்னணி காரணமா கத்தான் ஒரு படைப்பானது வாசகனினால் அவனவன் சார்ந்த புலக்காட்சி அனுபவங்களால் மீள் படைக்கப்படுகிறதெனவும் வாசகரின் எண்ணிக்கையினாற் பெருகிச் செல்கிறதெனவும் கூறப்படுகின்றது. நிலவரங்கள் யதார்த்தத்தில் இவ்வாறு இருப்பினும், எதனால் மேற்படி விட யம் மிகவும் பிரச்சினைக்குரியதாக்கப்படுகிறது. இதன் தார்பரியந்தான் என்ன? ஏனெனில் வேறுஞ் சில காரணிகள் இதனோடு சேர்ந்திணைந்துள்ளன.

கவிதையும் இலக்கியத்தின் ஏனைய வடிவங்களும் பேசுமொழி சார்பானவை என்பது தான் இவ்வகைக் குற்றச்சாட்டுக்கள் அதிகமுருவாக இன்னொரு அடிப்படைக்காரணமெனக் கூறமுடியும். கடந்த இதழில் நாம் விவாதித்தது போல இலக்கிய மொழியானது, பொதுமொழிக் குள் ஒரு தனிமொழி என்பதும் - அதன் மொழித் தர்க்கம், எமது அன்றாட மொழித் தர்க்கத்தி லிருந்து வேறுபட்டதென்பதுந்தான் பொதுவாக எம்மாற் தவறவிடப்படுகின்ற ஒன்றாக இலக் கிய வாசிப்பில் காணப்படுகின்றது. எமது அன்றாட மொழித்தர்க்கத்தின் துணைகொண்டு இலக்கியத்தினைத் திறக்க முற்படும் போதுதான் பிரச்சினை உருவாகிறது. ஆதலால், அது பல சமயம் திறக்கப்பட முடியாததாய் - அதனால் புரிந்து கொள்ளக்கடினமானதாகிவிடுவது டன், வேண்டுமென்று பூடகப்படுத்தப்படுவதாகவும் வாசகனாற் பார்க்கப்படுகின்ற நிலையும் ஏற்படுகிறது. இதற்கென்ன வழி? இதிலிருந்து வெளியேற முயற்சிப்பதெவ்வாறு?

முக்கியமானது என்னவெனில், ஒரு மொழியை அறிய அம்மொழியறிவு எவ்விதம் அவசி யமோ, அதே வாதந்தான் இலக்கியத்திற்கும் என்பர். ஏனெனில் எந்த ஒரு கலை வடிவமும் அதற்கேயான ஒரு மொழியமைப்பைக் கொண்டிருக்கிறது. அதனாற்தான் அதுவொரு தொடர் பாடல் முறையுமாகியுள்ளது. ஆதலால், கலை - இலக்கியத்தின் சுபாவங்களையும் அதன் கட்டமைப்பினையும் இயங்கு முறை - மற்றும் பரிமாணங்களை அறியவும் அதனால் அத னைப் புரியவும் கூடிய ஆற்றல் இலக்கிய வாசிப்பிற்கு முக்கியமானது. அதுவே, இலக்கி யங்களைத் திறக்கவும் - அதனுள் நுழைவதற்குமான அடிப்படையாகிறது. எனவே இலக்கிய மொழியுடனான குறைந்த பட்சப் பரீட்சையமாவது இல்லாது விடும்போது அந்த மொழிப் பிராந் தியத்தினுள் நடமாடுவதற்கான சாவி நமக்குக் கிடைப்பதில்லை. இது புரியாமை பற்றிய குற்றச் சாட்டுப் புறப்படும் மிகமிகப் பிரதானமானவொரு புள்ளி ஆகும். எதனால் இந்தச் சாவி எளிதில் அகப்பட மறுக்கிறது? இதன் வேர்கள் எங்குள்ளன?

எமது கல்வித்திட்ட மைய இலக்கியவூட்டல் அதற்கான அடிப்படையற்றது. அது பெருமள விற்கு சொற்களுக்கு அகராதிப் பொருள் கூறுதலை மட்டுமே சிரமேற் கொண்டுள்ளது. அது நமது அன்றாடப் பாவனையிலுள்ள சொற்கள் இலக்கியமாக உருமாறி உருவேறும் தருணங் களைத் தரிசிப்பதில்லை. அதாவது சொற்களின் கடப்புநிலையை அதற்கான சூழ் நிலைகளை அவை இனங்காண்பதில்லை. இவற்றின் தொடர்ச்சியாகப் பரீட்சை வினாத்தாள்க ளும் குறித்த ஒரு இலக்கியப் பாடம் யாரால் யாருக்கு, எச்சந்தர்ப்பத்திற் கூறப்பட்டது போன்ற வினாக்களைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைகின்றன.

படைத்தல் போலவே, இரசித்தலும் ஒரு ஆக்கச் செயற்பாடும், மனித மனத்தின் யாத்திரை யுந்தான். படைத்தல் போலவே இரசித்தலும் அதற்கான உழைப்பினைக் கோருகிறது. நாமோ அதற்கான சிறிய உழைப்பினையும் தரத் தயாராக இருப்பதில்லை. எமது கல்வியும் - சூழலும் எம்மை அவ்வாறுதான் ஆக்கியுள்ளன. அதனால், எந்த எத்தனிப்பும் இல்லாமல் ஒரு இலக்கி யப் பிரதி புரிய வேண்டுமென நினைக்கிறோம். அதுமட்டுமின்றி இந்த நினைப்பினுள் ஒரு அதிகார அடுக்கு வேறுபாடும் தென்படுகிறது எனலாம்.

மேற்படி வாதத்தை முன்மொழிபவர்கள் பெரும்பாலும் இந்தவகைபட்ட வாதத்தைக் கலை இலக்கியங்கள் மீதாகவே முன்வைக்கிறார்கள். விஞ்ஞான அறிவியற்துறைகள் என நம்பப் படுவன மீது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் பொதுவாக முன்வைக்கப்படுவது இல்லை. இதற்கு என்ன காரணம், இலக்கியம் சாதாரணமானது. எல்லோருக்கும் வாய்க்கக்கூடியது. உயர் அறிவு அதிகம் சம்பந்தப்படாதது. ஆனால் விஞ்ஞானமோ உயர் அறிவு சம்பந்தப்பட்டது. அத னைப் புரிந்துகொள்ளவொரு கெட்டிக்காரமேதாவி மூளை வேண்டும் என்ற ஒரு வகை யான அதிகார அடுக்கு காரணமான நம்பிக்கையும்இதற்குக் காரணம் போலத் தென்படுகி றது. இவ்வாறு, கலை இலக்கியம் தொடர்பில் வெளிப்படையாகச் சொல்லப்படாத ஆனால் விஞ்ஞான அறிவியலோடு ஒப்பிட்டு அதனைவிடத் தரங்குறைந்ததாகப் பார்க்கின்ற ஒரு குறை நிலைப் பார்வை தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் நிலைபெற்றிருக்கிறது.

மேற்குலகில் கலை இலக்கியங்கள் தொடர்பாக இன்னொரு விஞ்ஞானம்என்ற பொரு ளில் உலிதீ விஉஷ்eஐஉe எனக் கூறப்படுவதுண்டு. அதாவது, கலை இலக்கியங்களும் விஞ்ஞானம் போலவே தர்க்கங்கள் உடையவை. முன்னர் குறிப்பிட்டது போல அதன் தர்க்கங்கள் அகவய மானவை - உணர்ச்சிகளின் கொதிநிலையாற் கட்டப்படுபவை. உணர்ச்சிகளை உணர்ச்சிக ளாற் திறப்பவை என்பதனால் தேர்ந்த ரசிகனும் தேர்ந்த படைப்பாளியும் தமது மனவெளியில் ஒத்தவர்கள் தான். அதாவது படைத்தலும் ரசித்தலும் அடிப்படையில் ஒரு குறித்த மனநிலை எய்தல் சம்பந்தப்பட்டது. அதனால் தான் சமஸ்கிருத அழகியற் பாரம்பரியத்தில் ரசிகனைக் குறித்து சமமான இதயமுடையவன் என்ற பொருளில் சகிர்தயன் எனும் பதத்தை பிரயோகிக்கி றார்கள். இந்த சமமான இதயமுடையமை என்பது படைப்பாளி எதைக் குறித்தானோ அதைக் குறித்தறிதல் அல்ல பதிலாக அவனது குறிப்புரை கிளர்ந்த மன நிலவரத்தை அல்லது அடிப் படையை அடைதலாகும். பதிலாகக் குறிப்பிட்ட மனநிலவரத்தை அனுபவத்தைத் திறந்து வைக்கவே முயற்சிக்கின்றன என்பர்.

தேவைப்படுவதெல்லாம் சலியாத படைப்புக்களை எதிர்கொள்ளும் மனநிலையும் அதற் கான உழைப்புந்தான். தீட்டுந்தோறும் வாள்கள் பளபளப்பாகின்றன. கூர்மையுடைய வாள் எதனையும் கீறி ஊடறுத்துச் செல்லுவது - விண்மீன் போலும் வானகத்திற் சஞ்சரிப்பது. படைப்பினை திறக்கத்தக்க மனமும் அத்தகையதுதான்.

தொலைவில் ஒரு வீடு தொலைவில் ஒரு வீடு Reviewed by மறுபாதி on 10:25 AM Rating: 5

No comments:

Powered by Blogger.