வணக்கம்,
தமிழ்க் கவிதைப் பாரம்பரியம் மிகத் தொன்மையானதும் காலத்திற்குக் காலம் வடிவத்தாலும் பொருளாலும் மாற்றம் கொண்டுவருவதுமாகும். இத் தகைய மாற்றங்களின் மீதான விமர்சனங் களும் விவாதங்களும் தொடர்ந்தும் நடைபெற்றே வருகின்றன. ஆயினும் பல விடயங்கள் புத்திபூர்வமாக அணு கப்படாமலும் மரபுக்கட்டுப்பாடுகளுக் குள் அகப்பட்டு புனிதப் போர்வை விலக்கப்படாமலும் இருக்கின்றன.
நவீன கவிதைகளின் இயங்குநிலை தீவிரம் பெற்றுள்ள காலகட்டத்தில் மறு பாதி - கவிதைக்கான காலாண்டிதழ் - வெளிவருகின்றது. தமிழ்க் கவிதைப் புலத்தில் விரிந்ததான உரையாடலை நிகழ்த்துவதே எமது நோக்கமாகும். காலமாற்றத்தோடு இயைந்த வழியில் நாமும் கவிதையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எனவே கவிதை சார்ந்து செயற்படும் அனைத்துத் தரப்பினரா லும் அறிவுபூர்வமாக நிகழ்த்தப்படும் விவாதங்களையும் எதிர்வினைகளை யும் முன்னெடுத்துச் செல்லவே விரும்பு கின்றோம். அதற்காக கவிஞர்கள், படைப்பாளிகள், விமர்சகர்கள், வாசகர் கள் என யாவரினரதும் ஒத்துழைப்புக் களையும் வேண்டி நிற்கின்றோம்.
மறுபாதியின் வருகைக்காக தமது பங்களிப்புக்களையும் ஆலோசனை களையும் வழங்கியவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு இவ் இதழ் பற்றிய அனைவரது கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்த்து நிற் கின்றோம்.
ஆசிரியர்
தலையங்கம்
Reviewed by மறுபாதி
on
10:56 AM
Rating:
No comments: