கடலோடி
தமிழ் மொழியிலுள்ள நவீன இலக்கியப் படைப்புகளின் மொழியாக்கங்கள் வேற்று மொழிகளில் - குறிப்பாக ஆங்கி லத்தில் வர வேண்டியதன் அவசியம், பலராலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது; அத்தகைய முயற்சிகள் ஓர ளவு ஆங்காங்கு நடைபெற்றும் வருகின்றன.
முனைவர் கே.எஸ். சுப்பிரமணியம் தொகுத்து மொழி யாக்கம் செய்துள்ள ‘Tamil Poetry Today என்ற நூலைச் சென்னையிலுள்ள மஉலகத் தமிழாராய்ச்சி நிறுவ னம்டு வெளியிட்டுள்ளது.
பாரதியார், பாரதிதாசன் முதலிய 98 தமிழகக் கவிஞர்களினதும் எட்டு ஈழத்துக் கவிஞர் களினதும் கவிதைகள் இந்நூலில் உள்ளன. ஆங்கில மொழியாக்கத்திற்குப் பக்கத்தில் மூலத் தமிழ்க் கவிதையும் தரப்பட்டுள்ளது.
மஹாகவியின் தேரும் திங்களும் முருகையனின் இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு..., வ.ஐ.ச. ஜெயபாலனின் கடற்புறம், எம்.ஏ. நுஃமானின் கவிதை உள் ளம் , சு.வில்வரத்தினத்தின் காயம் , இளவாலை விஜயேந்திரனின் காணாதுபோன சிறுவர் கள், சிவரமணியின் முனைப்பு, எஸ். உமாஜிப்ரானின் இம்சை ஆகியன இடம்பெற்றுள்ள ஈழக் கவிதைகளாகும்.
முனைவர் கே.எஸ். சுப்பிரமணியம் ஏற்கெனவே தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு 11 நாவல் களையும், 5 குறுநாவல்களையும் , 2 கவிதைத் தொகுதிகளையும் மொழியாக்கம் செய்துள் ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments: