$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

கடிதங்கள்

மிக வேகமடைந்து வருகின்ற நவீன உலகின் இன்றைய மாற்றங் களை இலக்கியப் படைப்புக்களே வடித்துக் காட்டுகின்றன. அந்த வகையில் மறுபாதி இதழானது எண்ணற்ற அர்த்தங்களையும் சிந்தனைக் கிள றல்களையும் கொண்ட கவிதைகளையும் அது சார்ந்த விடயங்களையும் தொண்ணூறு நாட்களுக்கு ஒருமுறை பிரசவிக்கின்றது.

இம் மறுபாதியின் முழுப் பக்கத்தினையும் புரட்டிப்படித்து முடிந்ததும் அடுத்த பாதியை எப்போது புரட்டலாம் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலுள்ள கவிஞர்களின் படைப்பாற்றல் பாராட்டுதலுக்குரியதுடன் இவர்களின் இம்முயற்சி இன்றைய மாறிவருகின்ற கலை உலகிற்கு அவ சியமானதொன்றாகும்.

மறுபாதியின் பெறுமதியினை அனைவரும் உணரவேண்டுமானால் இம்மறுபாதி ஒவ்வொருவரின் கையிலும் தவழ வழியமைக்க எனது வாழ்த்துக்கள்.

மாற்றங்களை ஏற்படுத்துவது மறுபாதி

புலோலியூர் பிரபா

மறுபாதியின் முதலாவது இதழ் வாசிக்கக் கிடைத்தது. தீவிரமான வாழ்வியலின் சுடுதணலில் இருந்து தங்களின் மறுபாதி மிகவும் தீவிரமான வெளிப்படுத்துகையை, புதிய வீச்சை எமது இலக்கிய உலகுள் வீசுகிறது. தனது பூரணத்தை இழந்து துடிக்கும் கவிதைத்துறையின் நிரம்பலை நிச்சயம் மேற்கொள்ளும் திண்மை தங்களின் மமறுபாதிடுக்கு உண்டு. மேலும் தங்களின் பணி தொடர இறைவன் துணைபுரிவா னாக. அத்தோடு எப்போதும் அனாரிடம் இருக்கும் புதிர்த் தன்மையோடு கவிதை அநாயசமாக கட்டமைக்கப்பட்டிருக்கி றது. கோகுலராகவனின் கவிதையில் வரும் மமரங்கொத்திடு என்னையும் கொத்திக்கொண்டேயிருக்கிறது. பா.அகிலனின் மசுவிஷேசங்கள்டு கருத்துச் செறிவுள்ள கவிதை. தபினின் எளிமை, ஜெயசங்கரின் நிஜம், மருதம் கேதீஸின் மண்டைக்குள் எதுவோ செய்யும் மொழியும், விமலாதாஸின் இயல்பும், கபீரின் கவித்துவமும் எல்லாவற்றுக்கும் மேலாக என் ஆதர்ச கவிஞையான பஹிமாவின் மழை நெஞ்சத்தை நனைக்க மொத்தத்தில் மறுபாதி என் மறுபாதியைப் பூரணப்படுத்திக் கொள்கிறது.

தங்களின் முயற்சி மென்மேலும் செழித்து வளர எல்லா சக்திகளும் தங்களுக்குக் கிடைக் கட்டும்.

சண்முகம் சிவகுமார்

அக்கரப்பத்தன.

கடிதங்கள் கடிதங்கள் Reviewed by மறுபாதி on 8:39 AM Rating: 5

No comments:

Powered by Blogger.