வணக்கம்,
இலக்கியங்கள் எப்போதும் காலத் தின் சாட்சியங்களாக அமைபவை. காலத்தின் நகர்வும் சிதைவும் உருமாற் றங்களும் இலக்கியங்களிலும் பிரதி பலிக்கும். பொதுவாகப் படைப்பு இலக்கி யங்கள் மீது கேள்விகளையும் விமர்சனங் களையும் முன்வைப்பவர்கள் அவ்விலக்கியங்கள் எழுந்த காலச் சூழல் பற்றிய புரிதல்களைக் கொண்டிருப்பது அவசிய மானது. ஒற்றைப்படையான சிந்தனையு டன் அறிவுபூர்வமற்று முன்வைக்கப்ப டும் விமர்சனங்கள் எவ்வகையிலும் பொருத்தப்பாடாக அமைவனவல்ல. இலக்கியங்கள் வெறுமனே மொழிச் செயற்பாட்டின் விளைபொருளாக அமைந்துவிடுவதில்லை. வாழ்க்கை யின் பரிமாணங்களை, அவை உள்ளார்த் தமாகக் கொண்டி ருப்பவை. ஆதலால் சட்டமிடப்பட்ட தீர்க்கமான அளவு கோலால் ஒரு காலத்தின் இலக்கியங் களை விமர்சனத்துக்குட்படுத்த முடியாது. இலக்கியப் படைப்புக்களின் சமூக இயங்கு நிலையும் முக்கியத்துவமும் பற் றிய ‘புரிதல்’ இந்த இடத்தில் முக்கியமா னது. காலத்தின் முடிந்த முடிபான படைப் புக்கள் இவைதான் என்ற முடிவுகூறல் இலக்கியங்களுக்குப் பொருந்திவராது. வாசிப்புக்கான, விமர்சிப்பதற்கான பரந்த வெளியை இலக்கியப் பிரதிகள் கொண்டேயிருக்கின்றன. ஆயினும், காலத்தின் சாட்சிகளாகவும் அவை இருந்தே வருகின்றன.
ஆசிரியர்
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம்.
தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com
தொலைபேசி-00212053751
தலையங்கம்
Reviewed by மறுபாதி
on
9:59 AM
Rating:
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments: