$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

தீவின் வசியம்

ஆங்கில மூலம்- வென்டி வட்மோர்
தமிழில்- நிஷா

ஒரு விசித்திரக் கவர்ச்சியால்
சுற்றப்பட்டிருக்கிறேன்
ஒரு தீவின் வசியத்தில்
பிடிபட்டிருக்கிறேன்
பழைய ஒரு மந்திரத்தால்
பொறியிலிடப்பட்டிருக்கிறேன்
சொற்கொண்டு வர்ணிக்க முடியாத
ஒரு பக்தி

வெகு தொலைவான இடங்கள்
எனக்குத் தேவையில்லை
அலையும் தாகங்களும் என்னிடமில்லை
தாயகத் தீவின் அழைப்பு
எனது பசியான இதய நார்களை
சுண்டி இழுக்கிறது.

நான் ஆழ்ந்த பச்சை நீரில்
மூழ்கிப் போய் இருக்கிறேன்
அவளின் பொன்னிற சூரியனில்
எரிந்துபோயிருக்கிறேன்
அவளின் ஊதா வண்ண அந்திப் பொழுது
முடிவுறும் தருணத்தில்
ஒளிரும் தாரகைகளில் சொர்க்கத்தில்
மயக்கப்பட்டிருக்கிறேன்.

அவளின் நிலவொளி
மதுவால் மயக்கப்பட்டபடி
அவளின் மார்பில் பலகாலம்
உறங்கிக் கொண்டிருக்கிறேன்
அவளின் சந்தோ­த்தையும் சிரிப்பையும்
பகிர்ந்திருக்கிறேன்.
அவளின் கவலையின் கண்ணீர்த் துளிகளுடன்
உதிரம் சொரிந்திருக்கிறேன்.

அவளின் மஞ்சள் நிற கடற்கரையில்
கிடந்திருக்கிறேன்.
அந்த சிப்பியின்
மெலிந்த ரீங்காரத்தில்
எனது தாயகத் தீவின் வார்த்தையிலடங்கா
வசியம்!
தீவின் வசியம் தீவின் வசியம் Reviewed by மறுபாதி on 9:31 AM Rating: 5

No comments:

Powered by Blogger.