$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

எழுத்துக் கவிதையிலிருந்து நிகழ்த்து கவிதைக்கு

காலத் தேவையில் கவிதையின் பரிமாணங்கள்

சி.ஜெயசங்கர்
...............................................................
ஈழத்தமிழ்க் கவிதை மரபுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியினைக் கொண்டதோடு ஈழத்தமிழர்தம் தனிததன்மைக்கும் பண்பாட்டுக்கும் வளம் சேர்ப்பவையாகவுமுள்ளன.

இத்தகைய தனிததுவமான மரபுகளின் தொடர்ச்சி காலத்துக்குக் காலம் புறச் செல்வாக்குகளுக்கு உட்பட்டும் மரபுகள், மாற்றங்களுக்கு முகம் கொடுத்த வண்ணமும் இருந்தவை. ஆயினும் மரபுகள் புழங்கப்பட்டும் பேணப்பட்டும் அறுபடாத் தொடர்ச்சியைக் கொண்டிருந்தமை கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

மேற்குமயப்பட்ட நவீனவாக்க ஆதிக்கத்தின் காரணமாகக் கவிதை உட்பட இலக்கியம், கலை மற்றும் மருத்துவம், நீர் முகாமைத்துவம் என அனைத்து அறிவுமுறைமைகளிலும் திறன்களிலும் மரபுகளின் தொடர்ச்சியில் தகர்வுகள் ஏற்பட்டிருந்தன. இந்தப் பின்னணியிலேயே நவீன கவிதை வடிவமான புதுக்கவிதை மிகப் பெருமளவுக்கு ஈழத்தமிழரின் கவிதைமரபுகளிலிருந்து விலத்திய ஒரு தளத்தில் வசன கவிதையாக விசாலித்துக் கொண்டிருக்கிறது.ஈழத்தமிழ்க் கவிதை மரபுகள் சமூகங்களின் பல்வேறு தளங்களிலும் பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு நோக்கங்களுடனும் இயங்கி வந்தவையாயினும் மிகப் பெருமளவுக்கு வசனத் தன்மை வாய்ந்ததும் கட்டுப்பாடுகள் மிகவும் குநை;தவையுமான புதுக்கவிதைகள் சமூகங்களின் பல்வேறு தளங்களிலும் ஊடுருவி எளிமையான சொற்கள், எளிமையான நடை, எளிமையான தொடர்பாடல் என வடிவமெடுத்துக் கொண்டது. சமூகங்களின் பல்வேறு தளங்களையும் ஊடறுத்து புதுக்கவிதை இயக்கம் பெற்றிருப்பினும் அது எழுதப்படிக்கத் தெரிந்த மக்கள் தொகுதியுள் வாசிப்பு ஆர்வமும் இலக்கிய நாட்டமும் கொண்ட பகுதியினருக்கு உரியதாகவே இயங்கி வருகினற்மையும் குறிப்பிடத்தக்கதாகும். நவீன காலத்துக்கு முந்திய சமூகங்களின் வாய்மொழி மரபுகளோடு இயைந்திருந்த பொதுமக்களுக்கு உரியதான கவிதைப் பண்புகளில் இருந்து வேறுபட்டதாகவே புதுக்கவிதை மரபு விளங்குகிறது.

நவீன இலக்கிய வடிவமான புதுக்கவிதை மிகப் பெரும்பாலும் மேற்கு ஐரோப்பிய நவீன கவிதை மரபுகளின் குழந்தையாகவே பிறந்து வளர்ந்து கொண்டிருக்கின்றது. இரண்டாயிரம் வருடத் தொடர்ச்சியினைக் கொண்ட ஈழத்தமிழர்தம் கவிதை மரபுகளின் தொப்புள் கொடி உறவினை அது அத்துவிட்டிருக்கிறது என் கருத்தும் ஈழத்தமிழ்க் கவிதை மரபுகளில் புழங்கப்படும் கவிதைக் கொள்கைகள், இலக்கணங்கள், உத்திகள், நோக்குகள் என்பவை நவீன கவிதை மரபுகளை செழுமைப்படுத்தக் கூடிய கவிதை மூலவளங்களாக இருக்கின்றன என்ற கருத்தும் உள்வாங்கப்பட்டு உரையாடல்களுக்கும் உருவாக்கங்களுக்குமான தூண்டுதல்களும் ஆற்றுப்படுத்தல்களும் அவசியமா கின்றன. ஏனெனில் ஈழத்தமிழர் கவிதை மரபுகளில் கவிதை, புலவர்கள், வித்துவான்களிடத்தில் மட்டும் முடங்கிக்கிடந்த வடிவமல்ல. அது மொழிதலாய், இசையாய் சங்ககாலப்பாணர், விறலியர்களிடமிருந்து கிராமிய மக்கள் கவிமரபுகள் வரை பரந்துவிரிந்து இயங்கியவை.கிராமியக் கவிதையாக்கம் என்பது வாய்விட்டுச் சொல்லுவதற்கும் பாடுவதற்கும் மட்டுமல்லாது மனம் விட்டுச் சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் உரியதாகவும் விளங்கின. இன்றும் அவை அவ்வாறு விளங்கி வருவதைக் காணவும் அனுபவிக்கவும் முடியும். இவை அச்சுவடிவம் பெறும்போது வாசிப்புக்குரிய இலக்கிய நயத்தையும் கொண்டிருக்கஜன்றன.இந்தப் பண்புகளைக் கருத்தில் கொண்ட ஆபிரிக்க நவீன கவிஞர்கள் தங்களுடைய சமூக எதிப்பியக்கங்களில் கவிதையைப் புதிய பரிமாணங்களில் புத்தாக்கம் செய்தனர். வாசிப்பதற்கே உரியதான நவீன கவிதையாக்க மரபில் இருந்து விலகித் தம் சூழலின் கிராமிய அல்லது வாய்மொழி மரபுகளின் பண்புகளை உள்வாங்கி கவிதை ஆக்கத்தை கட் புல வாசிப்புக்கப்பால் கட்புலத்துக்கும் செவிப்புலத்துக்கும் உரிய நிகழ்த்து கவிதையாகப் பரிணமிக்கச் செய்திருக்கின்றனர். இவை நிகழ்த்துகைக்குரிய நயங்களைக் கொண்டிருப்பதுடன், வாசிப்புக்குரிய நயங்களைக் கொண்டவையாகவும் அச்சுருவம் பெற்றிருக்கின்றன. இதனை எழுத்து மரபும் வாய்மொழி மரபும் இணைந்த மரபாக கோட்பாட்டு ருவாக்கம் செய்திருக்கின்றனர்.

ஈழத் தமிழர் ஓவிய மரபில் நிகழ் ஓவியம் செயல்வடிவம் பெற்று நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஆயினும் உடுக்கடித்து சல்லாரி கொட்டி அம்மானை பாடும், காவியம் பாடும் வாய்மொழிப் பாடல் வளம் நிறைந்த தமிழர் கவிதை மரபில் நவீன கவிதை நிகழ்த்து கவிதை (ணைலிதுழிஐஉ ணைலிமிதீ) என்பதாகப் பரிமாணம் கொண்டிருக்கிறதா என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. மாறாக நவீன கவிதையான புதுக்கவிதை நவீன கவிஞர்களின் கட்டுப்பாட்டுக்குள் சிக்குண்டுவிட்டதோ என எண்ணவும் தோன்றுகிறது.ஈழத்து நவீன கவிதை மரபில், கவிதை என்பது கவிதா நிகழ்வாகப் பிப்பெடுத்து புகழுற்று இருந்தாலும் அது நாடகக்காரர்களின் கைகளில் மேலுமொரு நாடக வகையாக கவிஞர்களுக்கு அப்பாலானதாக மிக இளம் பருவத்தில் அகாலமாய்ப் போயிற்று. ஆதிக்க எதிர்ப்புக்களுக்கும் மக்கள் இயக்கங்களுக்குமான கவிதைகள், தனித்த வாசிப்பு அனுபவத்திற்குள் சுருங்கிக்கடந்தவையல்ல. மேலும் கவிதைகள் என்பவை தனித்த எழுத்து வாசிப்புச் செயபாடுகளுக்கு உரியவையுமல்ல. ஈழத்தமிழ்க் கவிதை மரபுகளிலும் உலகக் கவிதை மரபுகளிலும் கவிதை குழுநிலைக் கொண்டாட்டங்களுக்கும் அனுபவங்களுக்கும் உரியவையாக இருந்து வருவதொன்றும் ஆச்சரியமானதுமல்ல. இத்தகைய பின்னணியில் ஈழததமிழர்தம் கவிதை மரபுகளில் இருந்து ஊட்டம் பெற்ற நவீன கவிதைகளின் நிகழ்த்து கவிதை உருவாக்கம் காலத்தின் தேவையாகிறது. இது கவிதையை மக்கள் மயப்படுத்துவதுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஈழத்தமிழரின் கவிதை மரபுகளின் தொடர்ச்சியை முன்னெடுப்பதுடனும்சம்மந்தப்பட்டிருக்கிறது.
எழுத்துக் கவிதையிலிருந்து நிகழ்த்து கவிதைக்கு எழுத்துக் கவிதையிலிருந்து நிகழ்த்து கவிதைக்கு Reviewed by மறுபாதி on 9:48 AM Rating: 5

No comments:

Powered by Blogger.