$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

ஓவியம் வரைகையில் தூரிகை புரியும் புன்னகையின் நிதானங்களோடு எஸ்.நளீமின் ‘இலை துளிர்த்துக் குயில் கூவும்’

- எஸ். பாயிஸா அலி

தொன்று தொட்டே இலக்கிய மணம் இடையறாது கமழும் கிழக்கிலங்கையின் மட்டக்களப் புப் பிரதேச வாசியான எஸ். நளீம் சிறந்த கவிஞர் மட்டுமின்றி ஓவியம், சிறுகதை, பத்தி (சிதறி வீழ்ந்த மைத்துளியின் அழகு-எங்கள் தேசம்), நூலாய்வுகள் எனப் பன்முகத்தளங்களில் தொடர்ச்சியாய் இயங்கி வரும் இளைய தலைமுறைப் படைப்பாளி. இவரின் முதல் கவிதைத் தொகுப்பான கடைசிச்சொட்டு உசிரில்’ 2000 ஆம் ஆண்டின் வடகிழக்கு மாகாண சாகித்திய விருதினைப் பெற்ற தொகுதி. இவரின் இரண்டாவது தொகுப்பான இலை துளிர்த்துக் குயில் கூவும்தொகுதியைக்கூட முகப்பு, வடிவமைப்பு, தளக்கோலம், உள்ளடக்கம், ஓவியம் உள்ள டங்கலாக காத்திரமான வரிகள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வெகு கச்சிதமா கவே செய்திருக்கிறார்.

பல்வேறு சஞ்சிகை, நூல்களுக்கு அட்டைப்படம் வரைந்த தன் தூரிகையையே இங்கு அட் டையிலிருத்தித் தன் படைப்பாற்றலுக்கு வெளிச்சமிட்டதோடு நேர்த்தியிலும் முன்னட்டையின் தரம் பேணியிருக்கிறார் கவிஞர்.

போரோய்ந்து துயர் நீங்கின்

இலை துளிர்த்துக்

குயில் கூவும் நமக்குள்ளே

என்னும் வரிகள் தசாப்தங்கள் தாண்டியும் இடைவிடாது தொடர்ந்த யுத்தத்தாலும் அது விதைத்த ஆறாரணங்களாலும் நிம்மதியிழந்த நிலையில்த் தவிக்கும் ஆயிரமாயிரம் இதயங் களின் இயலாமைப் பெருமூச்சுக்களின் சமாதானத்திற்கான, இன நல்லுறவிற்கான ஏக்கத்தி னையும் அமைதியான வாழ்விற்கான அவசியத்தையும் வலுவாய் உணர்த்தி நிற்கிறது.

உள்ளேயுள்ள 60 கவிதைகளிலும் பெரும்பாலானவற்றில் போரின் அழிவுகளும், இன வன்முறையும் சமாதானத்திற்கான ஏக்கமுமே பாடுபொருளாகி ஒரு இனத்தின் அழிவையும் இழைக்கப்பட்ட அநீதிகளையும் வரலாற்றின் முகங்களின் கண்ணாடியாகிப்போன வன்முறை யின் அழகியல் கெடாமல் பேசி நிற்கிறது.

சமாதான இருளில்’,‘சுமையா’,‘இன்னுமொரு தேசியகீதம்’,‘பாட்டியின் ஈறல்’, ‘16.09.2003’,‘கபன் துணிக்குவியல்’,‘சமாதானப் பலி’,‘நடுநிசி வாழ்க்கை’,‘நும்ரூத்தைக் கண்ட நாள்’,‘சந்தாக்குப் பயணிகள்’,‘பசுத்தோல் போர்த்தி’,‘பிறழ்வு’,‘கேள்வி’, மரணம் மரணமில்லை’,‘இருக்குக் கதிரிலிட்ட மழைமுட்டை’,‘நிலா ஒழிந்த இரவில்’,‘கலவரம்’,‘சமா தானப் பலி’,‘மொழி ஈர்ப்பு விசைபோன்ற கவிதைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

படைப்பாளனது பார்வையின் தனித்தன்மையே இலக்கியம் சுவையாவதற்கு மூலகார ணம். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் கல்லின் கதையும் அறிவேன் - அதைக் காவியமாக்கி வைப்பேன் - புல்லின் பேச்சும் அறிவேன் - அதைப் புராணமாக வடிப்பேன். என்றாரே அது எப்படி முடிந்தது அவருக்கு. கவிஞனின் கண்களோ சுற்றிலும் பார்ப்பவை. சுற்றியுள்ள பொருட்களை முற்றிலும் பார்ப்பவை. கண்கள் வழியே மனதால் காண்பவை. யாவையும் உணர்ச்சி ததும்பும் உயிர்த் துடிப்போடு பார்ப்பவை. கல்லையும் புல்லையும் கல் லும் புல்லுமாகவே காணும் வெற்றுப் பார்வையாளர்களிடையே சடப்பொருட்களையே ஊனும் உயிர்த்துடிப்பும் உள்ளதாகக் கண்டு அவற்றின் காரணமாகத் தன் உள்ளத்தால் படித்த உணர்ச்சிப் பார்வையை கவிதையாய் மொழி பெயர்க்கின்றான் கவிஞன்.

இங்கேயும் அழகியல் சார்ந்து பின்னப்பட்ட இவரது கவிதைகளில் பரவசமூட்டக் கூடிய படி மங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து களிப்பூட்டி நிற்கிறது. பாணிச்சேவல் குரல் எழுப்பித் தொண்டை கம்ம எனும் கவிதையில் வானம் ஒரு குப்பைத்திடல் / கசக்கி வீசிய முகில் குவிந்து / கழுத்துவரைக்கும் வெள்ளம் / நான் அதிகாலைப் பாணிச் சேவல் / உதயசூரி யன் கவிழ்ந்து / ஈர்க்குத்தடியாகிப் பெருக்காதா / எங்கிலும் மழைக் குப்பை குப்பைஎனும் போது வானம் ஒரு குப்பைத் திடலாகி சூரியன் ஈர்க்குத் தடியாகி மழையோ குப்பையாகி ஓரடி மேலே போய் கவிஞனோ பாணிச் சேவலாகி விடுகிறான்.

தலைக்குள் அணில் கவிதையில் தென்னை மரம் இளம் பெண்ணாய் படிமப்பட்டிருக்கி றது. சைக்கிளில் காலூன்றி / முற்றத்தில் நின்று / பாளை வெடித்துச் சிரிக்கிறாயேஎனும் போது தென்னை மரத்தில் சாத்தி வைக்கப்படும் சைக்கிள் / வழமையாகவே வீட்டு முற்றங்க ளில் காணும் காட்சியயான்று கவிதையாய்த் தொடங்குகிறது. உச்சியில் அள்ளிமுடிந்த கேசம் / காற்றுக்குக் கலைந்தாடும் / ஆனால் உன் தலைக்குள் அணில் எனும் போதும் வயதுக்கு வந்து / காதில் அணிந்த மணப்பந்தல் / காற்றுக்காடி உதிர்கிறது. எனும் போதும் ஆடி அசையும் தென்னங் கீற்றுகளும் அதற்குள் ஒளிந்து விளையாடும் அணில் குஞ்சுகளும் சொரிந்து பரவிக்கிடக்கும் தென்னம் பூக்களும் எவர் மனதிலும் படமாய் விரியும்.

தவளை கத்தும் மழை எனும் கவிதையில் ஊன்றுகோலற்ற கிழவன் வானம் / பூமிக் கிழவி தகராறா? / புரிந்துணர்வு எங்குண்டு? / சீலைப் பேன் புழுத்து / உடலெலாம் ஊரும் அவஸ்தை / சிந்தனையில் சீழ் கட்டி / தெறிக்கும் வலி / பழம் புண் ஆறா / அனைத்துக்கும் வெயில் வேண்டும்.எனும் வரிகளில் மழைக்காட்சிகள் புதுப் புது அர்த்தங்களைப் பொழிந்து போகிறது.

மேலும் பல கவிதைகளும் வேறு பல கவிதா அனுபவங்களை எமக்குள் அசைபோட வைக் கின்றன. அசிங்கம் சூழ் வாழ்வில் உயரப் பறந்தவன் / தவறிச் சேற்றில் வீழ்ந்ததுபோல் எனும்போது பாரதியின் நல்லதோர் வீணை செய்தே... வரிகளும் நினைவை நெருடும். கோடையின்றி கொட்டும் மழை / மூழ்குவோர் மூழ்க / நீந்துவோர் நீந்த / கரை சேர்க்க யாருண்டுஎனும் வரிகளிலும் நிழலுக்கு யார் சமைத்துப் போட்டதும் / சட்டை தைத்துத் தந் ததும் நிஜத்தை நிழலாக்கி / நிழலே நிஜமாகும் கொடூரன் மனித நிழல் மட்டும்தான்.எனும் போதும் கண்ணதாசன் கொஞ்சமாய் மனக் கண்முன் தோன்றி மறைவார்.

வாழ்க்கையே ஒரு தேடல்தான் எனத் தொடரும் வைரமுத்துவின் வரிகளை மிஞ்சிப் போகும் இவரின் தூரத்து ஒற்றைக் குயிலின் கானமாய்எனத் தொடங்கும் தேடல் கவிதை நீ தந்ததையயல்லாம் திருப்பித்தா என்றால் / தந்து விடலாம்தான் இவைகளையும் திருப்பித் தர ஒரு வழியிருந்தால்என முடியும். ஒருவரில் ஒருவர் சாய்ந்து என்ற கவிதையில் பல வரி கள் தன் அன்பைப் புறக்கணித்த துணையின் இரும்பு மனத்தை விமர்சிப்பதாகவும் அதன் அன்பையே மறுபடியும் வேண்டி நிற்பதாயும் வெளிப்படுகிறது. கவிஞர் அனாரின் காதலைக் கொல்லும் தேவையிலும் இத்தொனி தொக்கி நிற்பதை அவதானிக்கலாம்.

இக்கவிதைத் தொகுதியிலுள்ள உணர்வுபூர்வமான கவிதைகளில் பாட்டியின் ஈறல்கவி தையும் ஒன்று. மமஎன் குழந்தைகளின் அகதி நாமம் அழிய வேணும் / என் தந்தை தாய்க்கரு கில் நானும் அடங்கப் பெறவேணும் / மண்ணின் குழந்தைகளே என் மண்ணைத் தாருங் கள். எனக் கதறும்போது இரும்பே உருகி ஓடும் வெம்மை நம் நெஞ்சுக் குழிக்குள் கனல்கி றது. உலகத்து அகதித் தாய்களின் மொத்த வலியின் உரு இங்கே வரிகளாக்கப்பட்டு மஹ்மூத் தர்வீசையும், சு.வில்வரத்தினத்தையும் அஷ்ரப் சிஹாப்தீனையும் இன்னும் பல கவிஞர்களை யும் நினைவூட்டிச் செல்கிறது.

மேலும் என்றும் சிலுசிலுத்தபடியே இருக்கின்ற ஒரு சின்னநதி, ஒரு கவிதை இலையான், ஆழமற்றவர்போல் காட்டும் ஆழம் கொண்டவர். நல்ல மனிதனையும் நல்ல கவிஞனையும் தேடித்தான் காணவேண்டும் நளீமைக் கூட.என்ற கவிஞர் சோலைக்கிளியின் வரிகளும் இங்கு நினைவிலிருத்த வேண்டியதொன்று.

இக்கவிதைத் தொகுப்பில் நான் அவதானித்த மற்றொரு விடயம் வரிகளுக்கு முடிவுக்குறி கள் இடப்படாமை. தன்விவரிப்புக்களையும் தாண்டிக் கவிதைக்குள் புதிய கூறுகளைப் பொருத் திப் புதிய பொருளையும் நாடிச் செல்லும் படியாக வாசகனின் சிந்தனைகள் விரிவடைய வேண்டுமெனக் கவிஞர் எண்ணினாரோ தெரியவில்லை.

விசேடமாகக் குறிப்பிட்டுக் கூறவேண்டிய இன்னுமொரு விடயம் கத்தம், நெல்லுப்பாய், குட்டை, குழப்பி, கொள்ளி வாய்ப் பேய், போயிலை அருந்திய பச்சோந்தி, பாணிச்சேவல், சீச்சிப் பொறுக்கி, தலையாரி, நடுச்சாமம், ஈறல், ஒப்பாரி, ஒட்டு நோண்டி போன்ற கிழக்கு மாகாண - அதிலும் குறிப்பாக மட்டக்களப்புப் பிரதேசத்துக்கே உரித்தான வட்டார வழக்குச் சொற்களும் அத்தோடு அம்மிக் கல் உருளைக்குள் நசுக்காமல், உரலுக்குள் இடியாகி இடிக்காமல், காலி டுக்கில் பன்னிழைத்து, கொண்டைக்குள் பேன் துழாவும் செம்பகத்தி போன்ற தொடர்களும் பெரும்பாலும் அழிந்துவிட்ட அல்லது அழியக் காத்திருக்கும் எமது கிராமத்துப் பண்பாட்டு அம்சங்களை எம் கண்முன்னே கொண்டு வருகிறது.

இவ்வாறாக கிராமத்து மக்களின் வாழ்வியல் அம்சங்களையும் சமூக வரலாற்று ஆய்வுக் கூறுகளையும் விபரிக்கும் கவிதை வரிகள் கவிஞரின் கிராமத்துத் தொன்மை மனதின் ஆய்வு ரசனைக்குச் சான்றாக மிளிர்கிறது. எமது பண்பாட்டம்சங்களையும் கலாசாரத்தையும் பேணிக் காத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் ஒப்படைக்க வேண்டுமென்ற உணர்வு கல்வியிய லாளர்களிடையேயும் ஆய்வாளர்களிடையேயும் வேரூன்றத் தொடங்கியுள்ள இந்நாட்களில் இக்கவிதை முயற்சி வரவேற்கத்தக்கதே.

இதைவிடவும் சமாதான இருளில்”, “மயில் துளிர்த்து கொக்கும் பூக்கா” , “கண்ணைக் கரிக்கும் உளிச் சிதறல்”, “வி­ஜந்து” , “குட்டை குழப்பிபோன்றவை நாறிக் கிடக்கும் அரசி யல் குப்பைகளை வரிகளால் கிளறிப் பார்க்கிறது. அதிலும் உள் வீட்டு அரசியலின் ஏமாற்றமா கிப்போன எதிர்பார்ப்புகளை எள்ளற் சுவையோடும் வலியோடும் கூறி நிற்கிறது.

ஓவியம் போன்றது கவிதைஎன்றார் உரோமப் பேரறிஞர் ஒரேசு. நளீமின் கவிதைக ளும் இதற்குப் பொருந்துவதோடு அவரின் நவீன ஓவியங்களும் இங்கே கவிதைகளாய் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். பெரும்பாலும் ஒவ்வொரு கவிதையோடும் அதனைச் சார்ந்து நிற்கும் நவீன ஓவியங்கள் நம் உள்ளங்களுக்குள் வர்ணங்களை வாரி இறைக்கின்றன. வர்ணத்தில் உயிர்த்த பட்சி”, “சவால்”, “விரல் நாக்கில் கலர் கலராய் எச் சில்போன்ற கவிதைகள் நவீன ஓவியமாய் உயிர்த்தெழுகின்றன.

புதுக்கவிதையில் இன்று முன்னணியில் இருக்கும் எமது சில மூத்த கவிஞர்கள் தம் கவி தைகளைத் தொடர்ந்தும் பொதுவான ஒரு இலக்கிய மொழியில் எழுதிக் கொண்டிருக்க, மறு புறம் சில நவீன கவிஞர்களோ நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்ற பெயர்களில் சொற் களையும் படிமங்களையும் நோக்கமின்றிச் சிதறடித்து கவிதையை இருண்மை நிலைக்குள் ளாக்கி வாசகருக்கு மூளைவிறைப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்க, இலை துளிர்ப்பது போல பூ மலர்வது போல மிக இயல்பாய் விரிகிற இவரது கவிதைமொழி. நிச்சயம் காலத்தை வென்று நிற்கும்.

ஓவியம் வரைகையில் தூரிகை புரியும் புன்னகையின் நிதானங்களோடு எஸ்.நளீமின் ‘இலை துளிர்த்துக் குயில் கூவும்’ ஓவியம் வரைகையில் தூரிகை புரியும்  புன்னகையின் நிதானங்களோடு  எஸ்.நளீமின்   ‘இலை துளிர்த்துக் குயில் கூவும்’ Reviewed by மறுபாதி on 8:53 AM Rating: 5

No comments:

Powered by Blogger.