$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

விழுங்கும் தருணங்கள்



தீபச்செல்வன்

முடிவற்ற உரையாடலையும் தன்னை விழுங்கும் தருணங்களையும் முரண்பாடுக ளையும் ஏமாற்றங்களையும் கலைமகளின் கவிதைகள் பிரதிபலிக்கின்றன. தனக்கான உலகத்தை, தனக்கான சொற்களை, பொழு துகளை இன்னும் பிறவற்றைக் கோரிநிற்கின் றன கலைமகளின் கவிதைகள்.
தனது நினைவுகள் அனுபவங்களைக் கவிதைகளாக வெளிப்படுத்தும் கலைமகள் தனது காத்திருப்பையும் காதலின் நெருக்கத் தையும் மிக உன்னதமாகக் கருதுகிறார். எந்த முரண்பாடுகளிலும் பிரிவுகளிலும் காதல் அல்லது நெருக்கம் குடியிருப்பதை வெளிப்படுத்துகிறார். அது எப்படி சுருங்குகி றது எனவும் பெருகுகிறது எனவும் பேசுகி றார். அன்புக்காக அழைக்கிற மனமும் சொற் களும் அவரை முழுமையாக இங்கு பிரக டனம் செய்து விடுகிறது.

உனக்கும் எனக்கும்
ஒத்துவராத சில
பக்கங்கள் நடுவே இன்னும்
அமர்ந்திருக்கிறது நம் காதல்

என்ற இந்தக் கவிதையின் கூறுதல் முறை மையையும் அதன் அர்த்தத்தையும் நோக்கு கின்றபோது, அது பல கவிஞர்களின் கவிதை களை நினைவுபடுத்துவதாகத் தன்னை வெளிப்படுத்துகிறது எனலாம். ஆனால் தன்னை உன்னதமாக்குகிற

பாரதியின்
கவிதையை விட
கண்ணம்மாவின்
கண்ணீர் ஆழமானது

என்பதன் வாயிலாக பெண்ணினது இயக்க சக்தியையும் ஆளுமையையும் அன்பையும் எடுத்துக் காட்டி உன்னதப்படுத்துகிறார். வாழ்வை மிக உன்னதப்படுத்துகிற மனதை கலைமகளின் காதல் சார்ந்த கவிதைகளில் காணமுடிகிறது. தன்னை விழுங்குகிற தரு ணங்களாகக் கருதினாலும் தொடருவதற்கு தேடி அடைவதற்கு பிரயாசப்படுகிறது.

தொடரும் ......
என்னும் வார்த்தையை உன்
ஒவ்வொரு வரிகளிலும்
தேடித்தோற்றேன்

இந்தத் தோல்வியும் ஏமாற்றமுமே பின்னர் வரும் கவிதைகளையயல்லாம் தூண்டி விடு கின்றன. அதுவே வாழ்வாகவும் தொடருகின் றது.

உன்னை நான்
நேசித்த பொழுதுகளை
அறியமாட்டாய்
வெறுத்த பொழுதுகளையே
நீ அறிவாய்

என்று இப்படிச் சொல்லுகிற கவிதையைத் தொடர்ந்து வருகிற மற்றைய கவிதையில்

.....உடல் ரீதியாய்
உணர்வு ரீதியாய்
நான் வித்தியாசமானவள்
உன்னில் இருந்தும்
அவர்களில் இருந்தும் என்று இருக்கிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியமான கவிதைகளாக மமநான்டுடு என்றமைந்த தன் னைக் குறித்து எழுதும் பிரகடனங்களை அல்லது மனவெளிச் சொற்களைக் குறிப்பிட லாம். கலைமகளும் அவற்றை இங்கு முக்கி யப்படுத்துகிறார். உன் முன் மண்டியிட விரும் பவில்லை என்னும் பொருள் சார்ந்தமைகிற வரிகள் ஏற்கனவே பல கவிஞர்களின் கவி தைகளில் பார்த்திருக்கிறோம். மநான்டு என்ற தலைப்பிலமைந்த கவிதை தன்னைக் குறித்த பாடலாக இருக்கின்றது. அவை கன வுகள் ஏமாற்றங்கள் முயற்சிகள் குறித்துப் பேசுகின்றன.

இந்த முயற்சிகள், ஒரு கட்டத்தில் குருதி சிந்துகிற தருணங்களுக்குக் கொண்டு செல் லுகிறது. மகுருதி சொட்டும் கண்ணீர்டு, மமுடி வில்லாத பேச்சுக்கள்டு முதலிய கவிதைகள் இவ்விதம் அமைகின்றன. மமுடிவில்லாத பேச்சுக்கள்டு என்ற கவிதை முழுத் துயர்க ளின் வலியாக வருகிறது.

உங்கள் முன்
மேடையேறும் எங்கள் கால்கள்
வெந்துபோகிறது ஆனால்
எல்லாவற்றையும்
பேசித்தீர்த்துக் கொள்வதற்காய்
மீண்டும் மீண்டும்
மேடை யேறுகின்றது

இந்த முரண்பாடுகளுக்குள் பிறந்துவிடு கிற குழந்தை குறித்த தாய்மையின் ஏக்கங்க ளாக சில கவிதைகள் வருகின்றன. இந்தக் குழந்தை துயர்கொள்ளுகிறது, அழுகிறது, திசையற்றுக் கிடக்கிறது, யாருக்கு உரியது என்ற கேள்விகளால் தனித்திருக்கிறது. இவ் வாறு தனித்திருக்கும் குழந்தைக்கான தாய் மையின் ஏக்கத்தை கலைமகளின் இந்த வரி கள் உணர்த்துகின்றன.

....அவன் விந்துவில் தான்- நீ
பிறந்ததாய் கூற
விட்டு வந்தேன்
பால் சுரக்கையில்
புரிகிறது

மவாழ்தல்டு என்ற கவிதைதான் இந்தத் தொகு தியில் என்னை அதிகம் பாதித்த கவிதை. பயங்கரமான உலகத்தில் பிறந்து விடுகிற பெண் குழந்தையின் ஏக்கத்தை வாழ்தல் - 01 கவிதை பேசுகிறது.

மஇரு முலைகளுடன் பிறந்து விட்டாய்......
நான்
எப்படிச் சொல்வேன்
இந்த உலகம் பயங்கரமானது என்பதை
முன்னம் ஒரு பொழுது
என் தாய் காத்தது போல்
பின்னைய பொழுதுகளில்டு

இந்தப் பயங்கர உலகத்தில் தனது குழந் தையை எப்படிக் காத்துக்கொள்ளுவது என்ற ஏக்கமே இந்தக் கவிதை.

மபருந்துகள் வட்டமிடும்
காலங்கள் இவை
அடைகாத்து
சோர்ந்து போய் அமர்ந்திருக்கும்
நான் எப்படிச் செல்வேன்
இந்த உலகம் பயங்கரமானது என்பதைடு

குழந்தையின் முழு இருப்பையும் கவிதை மனம் கேள்விக்குள்ளாக்கிறது. மவாழ்தல் - 02டு கவிதை உயிரழிவைப் பற்றியும் அச்ச மும் அவலமும் நிறைந்த காலம் பற்றியும் பேசுகிறது. அதிகாரத்தால் பலி கொள்ளப்படு கிற வாழ்வு குறித்தும் பேசுகிறது. ஆயுத வழிப் போரின் அவலத்தைக் கவிதை இப்படி சொல் லுகிறது.

வன்முறை வளர ஆயுதம் வளரும்
ஆயுதம் வளர போர் வளரும்
போர் வளர கோன் வளர்வான்
கோன் வளர குடி வீழும்

உலகப் பொதுவான இன்றைய வாழ்வியல் அரசியலைக் குறிப்பிட்ட வரிகள் உள்ளடக்கி யிருக்கின்றன. வாழ்தல் - 03, 04 கவிதை கள் நான் வாழ்வேன் என்ற நம்பிக்கையைத் தருகின்றன.

நான் வாழ்வேன்
கனவுகளிலும் கசக்கி எறிந்த காகிதங்களிலும்
உதிர்ந்து கிடக்கும் மலர்களிலும்
இலையுதிர்கால வேனில் பொழுதுகளிலும்

முடிவில்லாப் பேச்சுக்கள் என்ற இத்தொகுப் பின் வாயிலாக தனது கனவுகளையும் எண் ணங்களையும் ஏக்கங்களையும் பகிரத் தொடங்கியிருக்கும் கலைமகளிடமிருந்து இன்னும் பல சிறந்த கவிதைகள் கிடைக்கு மென நம்பிக்கை கொள்ளலாம்.

விழுங்கும் தருணங்கள் விழுங்கும் தருணங்கள் Reviewed by மறுபாதி on 9:26 AM Rating: 5

No comments:

Powered by Blogger.